சிவாஜியால் முடிவுக்கு வந்த மேஜர் சுந்தராஜின் நட்பு!.. இறக்கும் தருவாயிலும் பேசாமல் இருந்த நண்பர்கள்..
தமிழ் சினிமாவில் தன்னுடைய குருவாக சிவாஜியை ஏற்றுக் கொண்டவர் மேஜர் சுந்தராஜன். மானசீக குருவாக ஏற்றுக் கொண்டாலும் சிவாஜியும் மேஜரும் ஒன்றாக மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தின் மூலம் தான் இணைந்து நடித்தார்கள். அதுவரை கிடைத்த கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த மேஜர் மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்திற்கு பிறகு சிவாஜியின் பெரும்பாலான படங்களில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.
அந்த அளவுக்கு முதல் படத்திலேயே சிவாஜியுடன் நல்ல பழக்கம் ஏற்பட்டு அதுவே இருவரையும் நல்ல நண்பர்களாக மாற்றியது. சிவாஜி சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளாக இருந்தாலும் என்ன இருந்தாலும் சரி மேஜரின் ஈடுபாடும் அதிகமாகவே இருந்தது. நடிகர் சங்கத்தலைவராக சிவாஜி பொறுப்பேற்ற பொழுதிலும் மேஜர் நடிகர் சங்க செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இதையும் படிங்க : பாக்யராஜ் செஞ்சது என்னமோ நல்ல காரியம்தான்… ஆனா சிவாஜிக்குத்தான் சட்டுன்னு கோபம் வந்திருச்சு!! அப்படி என்ன நடந்துச்சு??
இப்படி இருவரையும் ஒன்றாகவே பார்க்க ஆரம்பித்தது தமிழ் சினிமா. உயர்ந்த மனிதன் படத்தில் இருவரின் நடிப்பும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி நன்றாக போய்க் கொண்டிருந்த இவர்களது நட்புக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக ஒரு சம்பவம் அரங்கேறியது.
மேஜருக்கு அரசியலில் அறவே ஆர்வம் கிடையாது. ஆனால் சிவாஜி தனியாக ஒரு கட்சி ஆரம்பித்ததன் விளைவு அந்த கட்சியில் தன்னையும் இணைத்துக் கொண்டார் மேஜர். காரணம் சிவாஜி மீதுள்ள நட்பு தான். பொதுத் தேர்தலில் ஜானகிக்கு ஆதரவாக சிவாஜி கூட்டணி அமைத்துக் கொண்டு போட்டியிட்டார்.
ஆனால் ஒரு இடத்தில் கூட சிவாஜி வெற்றிப் பெறவில்லை. கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதன் விளைவு தான் என நினைத்து மேஜர் கட்சியில் இருந்து விலகி விட இதை சிவாஜி ஒரு அவமானமாக எடுத்துக் கொண்டார். சிவாஜி தோல்வியடைந்ததால் மேஜர் விலகிவிட்டார் என்ற பேச்சுக்கு வழிவகுக்கும். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மேஜர் இப்படி பண்ணிட்டாரே என்று அன்றிலிருந்து சிவாஜி மேஜருடன் பேச்சை நிறுத்திக் கொண்டாராம். அந்த முறிவு சிவாஜி இறக்கும் வரையில் தொடர்ந்திருக்கிறது. இருவருமே பேசிக் கொள்ளவில்லையாம். இந்த சுவாரஸ்ய தகவலை சித்ரா லட்சுமணன் தெரிவித்தார்.