தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனராக திகழ்ந்தவர் பி.ஆர்.பந்துலு. இவர் சிவாஜியை வைத்து “தங்கமலை ரகசியம்”, “வீரபாண்டிய கட்டபொம்மன்”, “கப்பலோட்டிய தமிழன்” போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருந்தார். அக்காலகட்டத்தில் இவரை சிவாஜி இயக்குனர் என்றே அழைப்பார்கள். ஆனால் ஒரு காலகட்டத்தில் பி.ஆர்.பந்துலுவுக்கும் சிவாஜி கணேசனுக்கும் விரிசல் ஏற்பட்டது.
அதாவது பி.ஆர்.பந்துலு சிவாஜி கணேசனை வைத்து இயக்கிய “முரடன் முத்து” என்ற திரைப்படமும், ஏ.பி.நாகராஜன் இயக்கிய “நவராத்திரி” திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக வேண்டிய சூழ்நிலை வந்தது. அதுவரை 99 திரைப்படங்களில் நடித்திருந்தார் சிவாஜி கணேசன். இதனை தொடர்ந்து “முரடன் முத்து”, “நவராத்திரி” ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளிவர வேண்டிய சூழல் இருக்கும் நிலையில் “முரடன் முத்து” திரைப்படத்தை 100 ஆவது திரைப்படமாக அறிவிப்பார் என பி.ஆர்.பந்துலு எண்ணினாராம்.
ஆனால் “நவராத்திரி” திரைப்படத்தில் சிவாஜி கணேசன் 9 கெட்டப்களில் நடித்திருந்ததால் “நவராத்திரி” திரைப்படத்தை 100 ஆவது திரைப்படமாக அறிவித்துவிட்டாராம் சிவாஜி. ஆதலால் சிவாஜிக்கும் பி.ஆர்.பந்துலுவுக்கு விரிசல் விழுந்ததாம். அதனை தொடர்ந்து பி.ஆர்.பந்துலு எம்.ஜி.ஆரை வைத்து “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்திற்கு பிறகு எம்.ஜி.ஆரை வைத்து பல திரைப்படங்களை இயக்கிய பி.ஆர்.பந்துலு, அதன் பின் சிவாஜியை வைத்து எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை.
இந்த நிலையில் பி.ஆர்.பந்துலு, 1974 ஆம் ஆண்டு இருதய கோளாறால் மரணமடைந்தார். அவர் இறந்தபோது அவருக்கு நிறைய கடன்கள் இருந்ததாம். அந்த கடன்களை எல்லாம் அடைக்க எம்.ஜி.ஆர்தான் உறுதுணையாக இருந்தாராம். இத்தகவலை பி.ஆர்.பந்துலுவின் மகள் பி.ஆர்.விஜயலட்சுமி தனது பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: ஹீரோவாக நடிக்க பாக்யராஜ் செய்த பயங்கர காரியம்… இப்படி எல்லாமா மெனக்கெடுறது?
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…