Sivaji Ganesan: தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு கொடுக்கப்படும் பட்டத்துக்கு பின்னாடி மிகப்பெரிய சுவாரஸ்ய சம்பவமும் இருக்கிறது. அப்படி சிவாஜி கணேசனுக்கு கொடுத்த பட்டத்தில் எந்த நடிகருக்கும் இல்லாத ஒரு ஸ்பெஷல் காரணமும் இருக்கிறதாம்.
சூப்பர்ஸ்டார் யார் என்ற சர்ச்சை கோலிவுட்டில் தற்போதைய சமயத்தில் அதிகமாகவே இருக்கிறது. ரஜினிகாந்துக்கு முன்னர் கமல்ஹாசன் தான் சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தினை வைத்திருந்தார் என்ற போஸ்டர் கூட வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: புருஷனுக்கு போட்டியா பொண்டாட்டியா… அதுவும் அப்பா சப்போர்ட்டுல.. என்னம்மா ஐஸ்வர்யா நியாயமா..?
ரஜினிக்கு பைரவி படத்திற்கு பின்னர்தான் சூப்பர்ஸ்டார் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. விஜய் தன்னுடைய ஆரம்பகாலங்களில் இருந்து இளையதளபதி என்ற பட்டத்துடன் இருந்தார். ஆனால் அது முன்னர் நடிகர் சரவணனுக்கு கொடுக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி நடிகர்களின் பட்டங்கள் எல்லாம் தயாரிப்பாளர், இயக்குனர் உள்ளிட்டவர்கள் மூலம் கொடுக்கப்பட்டு இருக்கும். ஆனால் சிவாஜி கணேசனுக்கு கொடுக்கப்பட்ட நடிகர் திலகம் பட்டத்திற்கு பின்னால் வித்தியாசமான கதை ஒன்று இருக்கிறதாம்.
இதையும் படிங்க: அப்படி போடு… Bullygang-ல் காலியான ஒரு பக்கா விக்கெட்… மிஸ்ஸான பூர்ணிமா..
நடிப்பில் திளைத்த சிவாஜி கணேசனுக்கு நடிகர் திலகம் என்ற பட்டத்தினை வழங்க வேண்டும் என்று ஒரு ரசிகர் பேசும் படம் நாளிதழுக்கு கோரிக்கை வைத்தார். அவர் கோரிக்கையை ஏற்றே அந்த இதழும் சிவாஜிக்கு அந்த பெயரை வைத்து பிரசுரித்தது.
அதை தொடர்ந்து 1957ம் ஆண்டு ரிலீஸான அம்பிகாபதி திரைப்படத்தில் சிவாஜிக்கு நடிகர் திலகம் என்ற பெயர் கொடுக்கப்பட்டது. அவர் எத்தனையோ படங்கள் நடித்தாலும், எக்கசக்கமான பட்டங்கள் வாங்கினாலும் நடிகர் திலகம் என்ற பெயர் இன்னமும் தாங்கி நிற்பது குறிப்பிடத்தக்கது.
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…