படத்திற்காக கட்டிய தாலி!.. நடிகர் மீதுள்ள அன்பால் கழட்ட மறுத்த நடிகை!..
தமிழ் சினிமாவில் நாட்டிய பேரொளியாக திகழ்ந்தவர் நடிகை பத்மினி. அதுவும் பத்மினியுடன் உடன் பிறந்த சகோதரிகளான ராகினி, லலிதா ஆகியோரும் நடனத்தில் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். ஆனால் சினிமாவில் கொடிகட்டி பறந்து வெற்றி வாகை சூடியவர் நடிகை பத்மினி மட்டுமே.
தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ள பத்மினி பெங்காலி, ரஷ்ய மொழி படங்களிலும் நடித்துள்ளாராம். அவர் அறிமுகமான முதல் படமே பெங்காலி மொழி படமாம். வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் இவர் ஆடிய நடனம் இன்றளவும் ஒரு வியப்பாகவே பார்க்கப்படுகிறது. என் ஆட்டத்திற்கு போட்டி போட யாராலும் முடியாது என்பதை ‘கண்ணும் கண்ணும் கலந்து ’ என்ற பாடல் மூலம் தெள்ளத்தெளிவாக உணர்த்தியிருப்பார் பத்மினி.
அவர் அறிமுகமான முதல் படமே நடிகர் திலகம் சிவாஜியுடன் தான். அதனால் தான் என்னவோ சிவாஜி மீது அளவில்லா பற்றுடனும் அன்புடனும் இருந்திருக்கிறார் பத்மின். பத்மினியின் சினிமா கெரியரிலேயே சிவாஜியுடன் மட்டும் தான் அதிக படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க : ரணகளத்துக்கு நடுவே அஜித்-விஜய் இணைந்து நடித்த படத்தை ரீ-ரிலீஸ் செய்ய முடிவெடுத்த படக்குழு… அடடா!!
கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் சிவாஜியுடன் மட்டும் ஜோடியாக நடித்திருந்தார் பத்மினி. அதனாலேயே திரையில் சிவாஜி - பத்மினி ஜோடியை ரசிகர்கள் மிகவும் விரும்பினார்கள். அதிலும் குறிப்பாக தில்லானா மோகனாம்பாள், வியட்நாம் போன்ற படங்களில் இவர்களின் ஜோடியை பார்த்து கண்ணுப்போடாதவர்களே இருக்க மாட்டார்கள்.
இப்படி பல படங்களை சிவாஜி பத்மினி சினிமா வாழ்க்கைக்கும் உதாரணமாக சொல்லலாம். இந்த நிலையில் பிரபல நடிகையும் தயாரிப்பாளருமான குட்டிப்பத்மினி சிவாஜி மீது பத்மினி எந்த அளவுக்கு பாசமாக இருந்தார் என்பதை கூறியுள்ளார். குட்டிப்பத்மினி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சிவாஜி மற்றும் எம்ஜிஆருடன் பல படங்களில் நடித்திருக்கிறார்.
அதனால் பல பழம்பெரும் நடிகைகளை பற்றிய சில சுவாரஸ்யமான சம்பவங்களை கூறும் போது பத்மினியை பற்றியும் ஒரு உண்மையை கூறினார். சிவாஜிக்கு சூட்டிங் அடுத்த நாள் சுவாமிமலையில் திருமணம் முடிவாகியிருந்ததாம். முதல் நாள் சூட்டிங்கில் ஒரு படத்தின் காட்சிக்காக பத்மினி கழுத்தில் தாலி கட்டுவது போன்ற காட்சி.
முதல் நாள் பத்மினி கழுத்தில் தாலி கட்டிவிட்டு மறு நாள் நிஜ திருமணத்திற்காக சென்று விட்டாராம் சிவாஜி. ஆனால் பத்மினி அந்த தாலியை கழட்டாமலே சில மாதங்கள் இருந்திருக்கிறார். உடனே அவரது அக்கா ராகினி அதை பார்த்துவிட்டு சத்தம் போட்டிருக்கிறார்.
ஆனாலும் கழட்ட மனமில்லாமல் பத்மினியின் அம்மா சினிமா வேற வாழ்க்கை வேற என்று சில அறிவுரைகள் எல்லாம் சொல்லி புரியவைத்து அதன் பின்னரே தாலியை கழட்ட வைத்திருக்கின்றனர். ஆனாலும் தாலியை கழட்டினாரே தவிர தன் மனதில் இருந்த சிவாஜியை ஒரு போதும் தூக்கிப் போடவில்லை பத்மினி என்று குட்டி பத்மினி கூறினார்.