நடிப்பில் சிவாஜி பிரதிபலித்த பிரபலங்கள்!.. ‘திருவிளையாடல்’ படத்தில் இந்த நடிகரைத்தான் காப்பி அடித்தாரா?..
தமிழ் சினிமாவில் நடிப்பிற்கே ஒரு இலக்கணமாக வாழ்ந்தவர் சிவாஜி கணேசன். நடிப்புச் சக்கரவர்த்தி, நடிப்பு அரக்கன், நடிப்பு பல்கலைக்கழகம் என நடிப்பிற்கு என்னென்ன அடைமொழிகள் கொடுத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாமோ அத்தனை அடைமொழிகளுக்கும் சொந்தக்காரராக சிவாஜி விளங்கினார். இவர் நடித்த ஒவ்வொரு படங்களின் கதாபாத்திரங்களும் காலம் முழுக்க நின்று பேசக்கூடியவையாகவே அமைந்திருக்கின்றன.
சிவாஜி நடித்தார் என்று சொல்வதை விட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். பொதுவாகவே சிவாஜி ஒருவரை பார்க்கிறார் என்றால் அவரின் குணாதிசயங்களை அப்படியே உள்வாங்கி கொள்பவர். ஏனெனில் அவர் சந்தித்த நபர்களின் கதாபாத்திரங்கள் போன்று படங்களில் அமைய நேர்ந்தால் ,தான் பார்த்த நபர் என்னென்ன குணாதிசயங்களோடு இருந்தாரோ அதை அப்படியே வெளிக்கொணர்ந்து நடிப்பவர்.
இதை ஒரு பேட்டியில் சிவாஜியே கூறியிருக்கிறார். இப்படி, தான் நடித்த படங்களில் யாரெல்லாம் சிவாஜி பிரதிபலித்தார் என்பதை பற்றிய ஒரு சிறு கட்டுரையை தான் நாம் இப்போது பார்க்க இருக்கிறோம். சிவாஜி நடித்த படங்களிலேயே அவருக்கு மிகவும் பிடித்த படம் நவராத்திரி. அந்த படத்தில் ஒரு கதாபாத்திரம் வேட்டைக்காரன் வேடத்தில் நடித்திருப்பார் .அந்த கதாபாத்திரத்திற்கு சிவாஜியுடன் அவ்வப்போது வேட்டைக்கு செல்லும் அவருடைய நண்பரான முத்து மாணிக்கம் என்பவரை மனதில் வைத்து தான் அந்த கதாபாத்திரத்தில் நடித்தாராம்.
அதேபோல கௌரவம் என்ற படத்தில் பாரிஸ்டர் ரஜினிகாந்த் என்ற கதாபாத்திரத்தில் படு ஸ்டைலாக சிவாஜி நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்திற்கு பிரபல தொழில் நிறுவனமான டிவிஎஸ் நிறுவனத்தின் நிறுவனரான டி எஸ் கிருஷ்ணா என்பவரை உள்வாங்கிக் கொண்டு அந்த படத்தில் நடித்தாராம்.
மேலும் தெய்வமகன் படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் சிவாஜி நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்தில் விஜயன் என்ற ரோலில் சிவாஜி எப்பொழுதுமே கையை வாயில் வைத்துக் கொண்டு ஒரு பெண்மை தன்மை கொண்ட கதாபாத்திரமாக நடித்திருப்பார். அதை இயக்குனர் ஸ்ரீதரை நினைவில் வைத்து தான் நடித்தாராம் சிவாஜி. அடிப்படையில் ஸ்ரீதர் ஒரு பெண்ணை தன்மை கொண்ட குணாதிசயம் கொண்டவராகவே இருந்தாராம் .அவரை வைத்தே அந்த கதாபாத்திரத்தில் நடித்தாராம் சிவாஜி.
அதேபோல திருவிளையாடல் படத்தில் மீனவனாக சிவாஜி நடித்திருப்பார். அந்த மீனவன் கதாபாத்திரத்தின் சிறப்பு அம்சமே அவருடைய நடை தான். அதை பிரபல ஹாலிவுட் நடிகரான யூல் பிரெய்னர் என்பவரை பிரதிபலித்ததாக கூறுகின்றனர். யூல் பிரெய்னர் எப்பொழுதுமே மொட்டை தலையுடனே எல்லா படத்திலும் நடித்திருப்பார். அவரும் இதே மாதிரி ஒரு படத்தில் நடித்தாராம். அதை பார்த்தே சிவாஜி திருவிளையாடல் படத்தில் பிரதிபலித்ததாக இந்த தகவலை பகிர்ந்த இதயக்கனி விஜயன் என்பவர் கூறினார்.
இதையும் படிங்க : ‘வானத்தைப் போல’ வெற்றிக்கு கேப்டன் சொன்ன சீக்ரெட் தான் காரணம்!.. இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..