பி.வாசுவை செருப்பால அடிப்பேன்னு சொன்ன சிவாஜி!..பின்ன அவரிடம் போய் இத பத்தி பேசலாமா?..
தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணமாக விளங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை. மேலும் நாம் நிஜத்தில் பார்க்க இயலாத வரலாற்று கதாபாத்திரங்களை இவரின் மூலம் நம் கண்முன் காட்டியிருக்கிறார்.
நடிப்பை தவிர எதுவுமே தெரியாது. அந்த அளவிற்கு நடிப்புதான் இவரின் மூச்சு. அப்படிப்பட்ட சிவாஜியிடம் வம்படியாக போய் பிரபல இயக்குனர் பி.வாசு சிவாஜியின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். அதாவது ஒருசில படங்களில் துணை இயக்குனராக இருக்கும் போதே சிவாஜியிடம் பழகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது பி.வாசுவிற்கு.
இந்த நிலையில் சிவாஜியை இயக்கும் ஒரு வாய்ப்பு வர படத்தின் கதையை சிவாஜியிடம் சொல்ல போயிருக்கிறார் பி.வாசு. அவரை உள்ளே அழைத்த சிவாஜி தன் முன்னால் அமரவைத்து அவர் அருகில் இருந்த டிவியை ஆன் செய்து கிரிக்கெட் பார்த்துக் கொண்டே ம்ம்.என்ன கதை என்று கேட்டிருக்கிறார். ஒரு 5 நிமிடம் கதையை சொல்லியிருக்கிறார் பி.வாசு.
ஆனால் சிவாஜி கிரிக்கெட் பார்த்துக் கொண்டே இருக்க பி.வாசு கதை சொல்வதை நிறுத்திவிட்டாராம். உடனே சிவாஜி என்ன என கேட்க இல்ல டிவியை ஆஃப் செய்து விடுங்கள் என்று கூறினாராம் வாசு. ஏன் என சிவாஜி கேட்க உங்க கவனம் சிதறும் என கூறியதும் சிவாஜி கோபத்தில் அடி செருப்பால. யார பாத்து என்ன சொல்லுற? கண்ணை மூடிக் கொண்டு இருக்கும் போதே கதை சொன்னாலும் அத உள்வாங்கி நடிப்பவன் நான். கவனம் முக்கியம் என்று எனக்கே சொல்றீயா என்று வாசுவை விரட்டி விட்டாராம் சிவாஜி. அதன் பின் வாசுவின் இந்த தைரியத்தை பார்த்து அவரது கம்பெனியிலேயே படம் இயக்கும் வாய்ப்பையும் கொடுத்திருக்கிறார் சிவாஜி.