பராசக்தி ரியல் ஹீரோ - ஹீரோயின் யார் தெரியுமா?!. சிவாஜி சொன்ன ஆச்சர்ய தகவல்!…
நாடகங்களில் நடித்து வந்த சிவாஜி பராசக்தி திரைப்படம் மூலம் நடிகராக மாறினார். முதல் படமே கலைஞர் கருணாநிதியின் கதை, திரைக்கதை, வசனத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. முதல் படத்திலிருந்தே சிறப்பான வெளிப்படுத்திய நடிகர் அனேகமாக அது நடிகர் திலகம் சிவாஜியாகத்தான் இருக்க முடியும். அதன்பின் பல படங்களில் நடித்தார்.
குறிப்பாக குடும்ப உறவுகள், செண்டிமெண்ட் உள்ள கதைகளில் அதிகம் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். எம்.ஜி.ஆருக்கு எப்படி ரசிகர்கள் இருந்தார்களோ அதுபோலவே சிவாஜிக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள். சோகமாக நடிப்பதற்கும், அழுது கொண்டே நடிப்பதற்கும் சிவாஜியை மிஞ்ச ஆள் இல்லை. சிவாஜி ஒரு சிறந்த நடிகர் என எம்.ஜி.ஆரே பல இடங்களிலும் பேசியுள்ளார். சோகம், விரக்தி, மகிழ்ச்சி, நம்பிக்கை துரோகம், மன உளைச்சல், ஏமாற்றம், குற்ற உணர்ச்சி என அனைத்து உணர்சிகளையும் முகத்தில் காட்டுவதால்தான் இவரை நடிகர் திலகம் என ரசிகர்கள் அழைத்தனர்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய நடிகர் திலகம் சிவாஜி ‘பராசக்தி படத்தின் கதை முதலில் நாடகமாகத்தான் எடுக்கப்பட்டது. நான் நான் அதில் நடிக்கவில்லை. நான் திரைப்படத்தில் மட்டுமே நடித்தேன். ஆனால், பராசக்தி கதையில் ஹீரோவாக நடித்தவர் யார் என நான் சொன்னால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். தற்போது திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும் சாமிக்கண்ணு என்கிற நடிகர்தான் பராசக்தி நாடகத்தில் ஹீரோவாக நடித்தார்.
அதேபோல், அந்த படத்தில் கதாநாயகியாக நடித்தது யார் என சொன்னால் நீங்கள் நம்பவே மாட்டீர்கள். ஒரு ஆண்தான் அந்த வேடத்தில் நடித்தார். நான் நடித்த முதல் மரியாதை படத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளியாக வந்து ‘சாமீ எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி’ என வசனம் பேசுவாரே.. அவரின் பெயர் ஏ.கே.வீராசாமி..அவர்தான் பராசக்தி நாடகத்தில் கதாநாயகியாக நடித்தார்’ என சிவாஜி கூறியிருந்தார்.
ஆச்சர்யமான தகவல்தான்!.