என் நிலைமை உனக்கும் வரக்கூடாது!.. நடிகையிடம் வருத்தப்பட்ட சிவாஜி..
தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவரது நடிப்பில் எத்தனை எத்தனை படைப்புகளை இன்றும் கண்டு களிக்கிறோம். இன்றைய இளம்தலைமுறையினர் காண இயலாத சரித்திர நாயகர்களை சிவாஜியின் உருவத்தில் பல படங்களில் கண்டு மகிழ்கிறோம்.
வீரபாண்டிய கட்டபொம்மனை நேரில் பார்க்காத நமக்கு இப்படித்தான் ஒரு வேளை இருந்திருப்பாரோ என்று வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்ததன் மூலம் நம்மை பிரமிப்பில் உறைய வைத்திருப்பார். அதே போல் கர்ணன் என்றால் இப்படித்தான் என கர்ணன் படத்தின் மூலமாகவும் நிரூபித்திருப்பார்.
வ.உ.சி பிள்ளை, பாரதியார், என பல வரலாறு படைத்த தலைவர்களையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருப்பார் சிவாஜி கணேசன். இவரது படங்களை பார்த்து சினிமாவிற்குள் வந்தவர்கள் ஏராளம். இன்று வரையும் அவரது பராசக்தி படம் அனைவருக்கும் ஒரு பாடமாக இருந்து வருகிறது.
நாடக மேடையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் சரித்திரம் படைத்த ஒரு உன்னதமான கலைஞன் தான் சிவாஜி கணேசன். இப்பேற்பட்ட சிவாஜி ஒரு நடிகையிடம் வருத்தப்பட்ட சம்பவம் அரங்கேறியிருக்கிறது. பசி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சத்யா.
அந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் பெருமளவு பேசப்பட்டதால் பசி சத்யா என்றே அழைக்கப்பட்டார். பெரும்பாலான படங்களில் சென்னை லோக்கல் பாஷை பேசி அசத்தும் நடிகையாக வலம் வந்தார். ஒரு சில படங்களில் வில்லியாகவும் கலக்கியிருக்கிறார். நாடகத்தில் இருந்து வந்தவர் தான் பசி சத்யா.
அவரது நாடகங்கள் பலவற்றை சிவாஜி பாராட்டியதாகவும் சத்யா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இந்த நிலையில் சிவாஜியின் ஒரு படத்தில் சிவாஜியுடன் ஒரு காட்சியில் நடிக்கும் வாய்ப்பு சத்யாவிற்கு வந்திருக்கிறது. உடனே கூட இருந்தவர்கள்
சிவாஜி எப்பேற்பட்ட நடிகர்? பாத்து பேசி நடி என்று சொல்லி அனுப்பியிருக்கின்றனர்.
சிவாஜி சத்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கி முடிந்ததும் சத்யாவை சிவாஜி மனதார பாராட்டினாராம். நல்ல பேசுற என்று சொல்லிவிட்டு சக ஊழியர்களிடம் ‘இந்த குட்டி என்ன அற்புதமாக பேசுது, நாடகத்தில் பார்த்தது, ’ என்று பாராட்டினாராம்.
மேலும் மீண்டும் சத்யாவிடம் இன்னும் சத்தமா பேசி வசனத்தை பேசு என்றும் சிவாஜி சொன்னாராம்.
காட்சிகள் எல்லாம் முடிந்து சிவாஜி சத்யாவிடம் ‘ நாடகத்திலும் நடிச்சுக்கிட்டு இருக்கீயா?’ என்று கேட்டாராம். இவரும் ஆம் என்று சொல்ல அதற்கு சிவாஜி ‘ விடாதே, தொடர்ந்து நடி, நாடகத்திலும் கவனம் செலுத்து, என்னால தான் முடியல, வயசாச்சுனு
சொல்லி எங்கேயும் போகவிடாம தடுத்துட்டாங்க, நீயும் அப்படி இருக்காத, இருக்கிற வரைக்கும் நடி’ என்று சொல்லி வருத்தப்பட்டாராம் சிவாஜி. இதை ஒரு பேட்டியில் பசி சத்யா கூறினார்.
இதையும் படிங்க : கவலைப்படாதே நீ பெரிய நடிகனாக வருவாய்!.. நம்பிக்கை சொன்ன நட்புக்கு மரியாதை செய்த எம்.ஜிஆர்….