அறைக்குள் நடந்த கலவரம்...! ஐய்யயோ அந்த சீனு போச்சா...? சிவாஜியை பதற வைத்த கம்பீர நடிகை...!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - நடிப்பில் கம்பீரத்தையும் எதார்த்தையும் அப்படியே நம் கண்முன் காட்டுபவர். இவர் நடிப்பின் மூலம் தான் வரலாற்றில் மிக முக்கிய கதாபாத்திரங்களை நம் நினைவுக்கு திரும்ப வரவழைத்தது.
வீரபாண்டிய கட்டபொம்மனையோ,கர்ணனையோ நாம் இதுவரை நேரில் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் இப்படியும் இருப்பாரோ என்று சிவாஜி தன் நடிப்பின் மூலம் நிரூபித்தவர்.இப்படி பட்ட நடிகர் திலகத்தையே அசற வைத்த நடிகை ஒருவர் இருக்கிறார்.
சிவாஜியை மட்டுமில்லாமல் அந்த கால ஹீரோக்கள் பல பேர் இவரை கண்டாலே கொஞ்சம் பயப்படுவார்களாம். அவர் தான் நடிகை பானுமதி. ஒரு சமயம் சிவாஜியும் பானுமதியும் சூட்டிங்கில் இருந்த சமயம் மதிய உணவுக்கான சாப்பாடு பெரிய பெரிய கேரியரில் வந்து இறங்கியிருக்கிறது.
பானுமதி அவரது மாமியாருடன் ஒரு அறையில் ஒரு கேரியரை கொண்டு சென்றாராம்.இந்த பக்கம் சிவாஜி மற்றும் மற்ற நண்பர்களுக்கான கேரியர் இருந்திருக்கிறது. இவர்கள் சாப்பிட கைவைத்ததும் அறையில் இருந்து தட்டு எல்லாம் பறந்ததாம். பானுமதியிடம் என்ன என்று கேட்க பல பேர் கேட்க பயந்து சிறிது நேரம் கழித்து தான் தெரிந்திருக்கிறது. அந்த கேரியரில் வெறும் உப்பு , ஊறுகாய் இவைகள் தான் இருந்ததாம். சாப்பாடு எல்லாம் சிவாஜிக்கு அனுப்பிய கேரியரில் இருந்திருக்கிறது.
இதனால் மிகவும் கோபப்பட்ட பானுமதி இப்படி நடந்திருக்கிறார். மேலும் உடன் மாமியார் இருந்ததனால் தான் இப்படி நடந்து கொண்டேன். இல்லையென்றால் தினமும் சாப்பாடு இப்படி தான் வருகிறது போல என்று நினைத்துக் கொள்வார் என்று கூறினாராம். சரி பரவாயில்லை, நான் அடுத்த ஷாட்டுக்கு ரெடியாகிறேன். நீங்க சாப்பிட்டு வாங்க என்று சிவாஜியிடம் கூறியிருக்கிறார். ஆனால் சிவாஜி எப்பா இப்ப எடுக்க போறது டூயட் பாடல் சீன். அதுக்கு முன்னாடி இப்படி நடந்திருக்கே என்று புலம்பி கொண்டே சென்றாராம்.