Connect with us

வந்திய தேவனாக ரஜினி…சிவாஜி சொன்ன யோசனை…கடுப்பான கமல்ஹாசன்….

pos

Cinema History

வந்திய தேவனாக ரஜினி…சிவாஜி சொன்ன யோசனை…கடுப்பான கமல்ஹாசன்….

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க எம்.ஜி.ஆர் முதல் கமல்ஹாசன் வரை பலரும் முயன்று அது நிறைவேறாமல் போனது. ஆனால், பல வருடங்களாக போராடி இதை சாத்தியமாக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்னம்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இதில், முதல் முதல் பாகம் வருகிற 30ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

pos

இப்படத்தில் பிரகாஷ்ராஜ், பார்த்திபன, ஜெயராம், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்ய ராய், திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் ரஜினி,கமல் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பொன்னியின் செல்வனில் விஜயகாந்த்…பல வருடங்களுக்கு பின் ரஜினி சொன்ன சீக்ரெட்….

இந்த விழாவில் கமல் பேசியபோது ‘பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்க அந்த கதையின் உரிமையை எம்.ஜி.ஆர் வாங்கி வைத்திருந்தார். அவரால் எடுக்க முடியாமல் போனது. எனவே, அவரிடமிருந்து நான் வாங்கி வைத்துக்கொண்டேன். சீக்கிரமாக எடு என அவர் என்னிடம் கூறினார்.

kamal

இது பற்றி சிவாஜி ஐய்யாவிடம் நான் பேசிய போது ‘வந்திய தேவன் வேடத்திற்கு ரஜினியை போடு’ என்று கூறினார். எனக்கு கோபம் வந்துவிட்டது. ‘அப்போ எனக்கு?’ எனக் கேட்டேன். நீ ஆதித்த கரிகாலன் வேடத்தில் நடி எனக் கூறினார். நான் வந்திய தேவன் வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். பலரும் எடுக்க முயன்றி தற்போது மணிரத்னம் மூலம் இது நடந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி’ என கமல் பேசினார்.

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவன் வேடத்தில் நடிகர் கார்த்தியும், ஆதித்த கரிகாலான் வேடத்தில் நடிகர் விக்ரமும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சோழநாட்டை கண்முன் நிறுத்தும் ‘பொன்னியின் செல்வன்’ – அதிரவைக்கும் டிரெய்லர் வீடியோ…

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top