தோல்வி படத்தை மீண்டும் எடுத்து ஆஸ்கர் வரை சென்ற சிவாஜி!.. அட இது செம மேட்டரு!..
பொதுவாக சினிமாவில் சில நல்ல கதைகள் கூட சில சமயம் தோற்றுப்போய்விடும். அதற்கு நடிகர்கள் கூட காரணமாக இருப்பார்கள். அல்லது அந்த கதையை இயக்குனர் சரியாக எடுக்காமல் கூட விட்டிருப்பார். இப்படி சில நல்ல கதைகள் திரைப்படமாக மாறும்போது ரசிகர்களை கவராமல் போய்விடும். இது திரையுலகில் பலமுறை நடந்துள்ளது.
முத்துராமம், கல்யாண் குமார், எம்.ஆர். ராதா, கண்ணாம்பாள் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த திரைப்படம்தான் தாயின் கருணை. இப்படம் 1965ம் ஆண்டு வெளியானது. இப்படத்தை ஜி.வி.ஐயர் என்பவர் இயக்கியிருந்தார். உல்கா எனும் பெங்காலி நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இது. இந்த நாவல் பல மொழிகளிலும் திரைப்படமாக உருவானது.
அப்படி தமிழில் வெளிவந்த தாயின் கருணை படம் ரசிகர்களை கவரவில்லை. 4 வருடங்கள் கழித்து அதே கதையை ‘தெய்வ மகன்’ என்கிற பெயரில் சிவாஜியை வைத்து எடுக்கப்பட்டது. இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. சிவாஜி இப்படத்தில் மூன்று வேடங்களில் மூன்று விதமான நடிப்பை காட்டி அசத்தியிருப்பார்.
முகத்தில் பெரிய தழும்பு இருக்கும், தாழ்வு மனப்பான்மை உள்ள கதாபாத்திரத்தில் சிவாஜி கலக்கியிருந்தார். இப்படத்தில் மேஜர் சுந்தர்ராஜன், ஜெயலலிதா, நம்பியார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் வெளிநாட்டு திரைப்பட வரிசையில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட முதல் திரைப்படமாகும்.
இப்படி ஒரு தோல்வி படத்தை மீண்டும் எடுத்து ஆஸ்கர் வரை சென்ற பெருமை நடிகர் திலகம் சிவாஜி கணேசனை சேரும்.
இதையும் படிங்க: தன் கெரியரில் இரண்டே நடிகர்களுக்கு மட்டும் பின்னனி பாடிய விஜய்!.. இவர்களுக்கா?..