என்னால கூட அப்படி நடிக்கமுடியாது!.. நாகேஷின் அந்த நடிப்பை பற்றி பிரமித்துப் போன சிவாஜி!..

by Rohini |   ( Updated:2022-10-05 07:16:46  )
nag_main_cine
X

தமிழ் சினிமாவில் ஓப்பற்ற கலைஞராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் நடிக்கிறார் என்று சொல்வதை விட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார் என்று தான் சொல்லவேண்டும். இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரம் இருக்கா என்றால் இல்லை என்பது தான் உண்மை.

nag1_cine

அப்படி பட்ட சிவாஜியே நான் செய்யாததை நீ செஞ்சுருக்க என சொல்லுமளவிற்கு நாகேஷின் நடிப்பை பாராட்டியிருக்கிறார். என்ன படம் தெரியுமா? ரேவதி, ரோகிணி, ஊர்வசி ஆகியோர் நடித்த மகளிர் மட்டும் படம் தான். பெண்களை கருவாக வைத்து தயாரித்திருக்கும் படம் தான் மகளிர் மட்டும் திரைப்படம்.

இதையும் படிங்கள் : என்னங்கடா கூப்பிட்டு வைச்சு அசிங்கப்படுத்துறீங்க?..கோபத்தில் முரளி செஞ்ச வேலையால் ஆடிப்போன படக்குழு!..

nag2_cine

இந்த படத்தில் ஒரு நகைச்சுவை காட்சியில் இறந்த பிணமாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடிகர் நாகேஷ் நடித்திருப்பார். இந்த படத்தை பார்த்து விட்டு தான் சிவாஜி நாகேஷின் வீட்டிற்கு போன் செய்துள்ளார்.

nag3_Cine

இதையும் படிங்கள் : எக்ஸ்க்யூஸ் மீ ! நீங்கதான் பாரதிராஜாவா?… வாயில் சிகரெட்டுடன் வாய்ப்பு கேட்ட மனோபாலா… சேரும்போதே இப்படியா??

தொலைபேசியில் பேசிய சிவாஜி நான் இதுவரை செய்யாததை நடிப்பின் மூலம் நீ பண்ணியிருக்க இந்த படத்துல. அற்புதமாக இருந்தது என்று நாகேஷை பாராட்டியதாக அவரின் மகனும் நடிகருமான ஆனந்த பாபு கூறினார். அந்த வயசுலயும் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நாகேஷ் நடித்திருப்பது பெருமைக்குரிய விஷயம் தான்.

Next Story