அடேங்கப்பா.... நடிகர் திலகம் சிவாஜி நடித்தும் காணாமல் போன படங்கள் இவ்ளோ இருக்கா?

Sivaji
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் ஏராளமான படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றவை. ஆனால் காணாமல் போன படங்களும் இருக்கவே செய்கின்றன. இந்தப் படம் வந்ததும் தெரியல. போனதும் தெரியலன்னு சொல்வாங்க. அப்படிப்பட்ட படங்கள் நடிகர் திலகத்துக்கே இருந்து வந்துள்ளதாம். அவை என்னென்ன என்று பார்ப்போமா...
நல்ல வீடு

Nallaveedu
1956ல் வெளியான நல்ல வீடு. இந்தப்படத்தில் சிவாஜி ஆடம்பரமான பணக்காரனாக நடித்தார். சிவாஜிக்கு ஜோடியாக எம்.என்.ராஜம் நடித்தார். இந்தப் படத்தில் ஆர்.எஸ்.மனோகர் நல்லவனாகவும், சிவாஜி வில்லனாகவும் நடித்தார். இது ஜோதிசிம்ஹா என்ற இந்திப்பட இயக்குனர் இயக்கிய படம்.
பெற்ற மனம்
1960ல் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியாரின் வேண்டுகோளை ஏற்று சிவாஜி நடித்தார். அதுதான் பெற்ற மனம் என்ற படம். ஏ.பீம்சிங் இயக்கிய படம். இந்தப் படத்தில் சிவாஜி பெரியார் வேடம் ஏற்று சிறிது நேரம் நடித்தார். சிவாஜி என்ற பட்டம் கொடுத்தவரே இந்தப் பகுத்தறிவு பகலவன் தான். இந்தப் படத்தில் நடிகர் திலகத்தின் ஜோடியாக புஷ்பவள்ளி நடித்தார்.
செந்தாமரை
1962ல் வெளியான செந்தாமரை படம். இந்தப் படத்தில் ஜோடியாக பத்மினி நடித்துள்ளார். இவர் திருமணத்திற்கு முன்பு கடைசியாக நடித்த படம் இதுதான். இந்தப் படம் நீண்டநாளாக தயாரிப்பில் இருந்தது. அதாவது 1953ல் இருந்து 1962 வரையிலும் 9 ஆண்டுகள் தயாரிப்பில் இருந்து வந்தது. அதன்பிறகு தான் வெளியானது. அப்படிப் பார்த்தால் இந்தப் படம் தான் ஏ.பீம்சிங் இயக்கிய முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவாஜிகணேசனை வைத்து ஏ.பீம்சிங் இயக்கிய முதல் படமும் இதுதான். இந்தப் படத்தை ஏ.எல்.சீனிவாசன் தயாரித்தார். அவருக்கு சிவாஜியும், பத்மினியும் முழு ஒத்துழைப்பை வழங்கினா்.
வளர்பிறை

Valarpirai
1962ல் வெளியான வளர்பிறை படம். இயக்கியவர் யோகானந்த். இந்தப் படத்தில் சிவாஜி பாதிப்படம் வரை ஊமையாக நடித்தாராம். கிராமத்தில் வாழும் பெரும் பண்ணையார் கம்பத்துக்காரர் வேடத்தில் சிவாஜி நடித்த படம் இது.
சிவாஜிக்கு இந்தப் படத்தில் கனகசுந்தரம் கதாபாத்திரம். ஒருநாள் பசுமாடு வாங்க பக்கத்து ஊருக்குச் சென்றபோது சரோஜாதேவியைப் பார்க்கிறார். தனது பெற்றோர்களிடம் கூற அவர்கள் சரோஜாதேவியைத் திருமணம் செய்து வைக்கின்றனர்.
சரஸ்வதி வேடத்தில் நடித்த சரோஜாதேவியின் உடன்பிறந்த அண்ணனாக ஜாவர் சீத்தாராமன் நடித்தார். இவர் தங்கைக்காக உயிரையே கொடுப்பார். அவரும் அந்த ஊரில் செல்வந்தர் தான். படத்தின் கதைகளம் இதுதான்.
சிவாஜிக்கும், சரோஜாதேவிக்கும் ரோகிணி நட்சத்திரத்தில் குழந்தை பிறக்கிறது. இது தாய்மாமனான சீத்தாராமனுக்கு பெரும் கஷ்டங்களைக் கொடுக்கிறது. கடைசியில் இறந்து போகிறார். இந்தப்படமானது ரோகிணி நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தையால் தாய்மாமனுக்கு மரணம் நிச்சயம் என்ற புராண சாத்திரத்தை எடுத்துச் சொன்னது.