Connect with us

சிவாஜியில் சிவாஜி இல்லை., விக்ரமில் விக்ரம் இல்லை.! களோபரமான தமிழ் சினிமாக்கள் லிஸ்ட் இதோ..,

Cinema History

சிவாஜியில் சிவாஜி இல்லை., விக்ரமில் விக்ரம் இல்லை.! களோபரமான தமிழ் சினிமாக்கள் லிஸ்ட் இதோ..,

தமிழ் சினிமா எப்போதும் புதுமை விரும்பி தான். ஆனால் ஒரு சின்ன பிரச்சனை என்னவென்றால் ஒரு ட்ரெண்ட் ஹிட்டாகி விட்டால் அடுத்து அதையே பாலோ செய்து பல்ப்  வாங்கிய தருணங்களும் உள்ளன. சரி, அது இருக்கட்டும் அப்படி என்ன புது விஷயம் என்று பார்க்கிறீர்களா ?

அது வேறு ஒன்றும் இல்லை. ஒரு ஹீரோவின் நிஜ பெயரை கொண்டு ஒரு படம் உருவாகும் ஆனால், அதில் அவர் நடித்து இருக்க மாட்டார். அப்படி வெளியாகி சில படங்களில் தொகுப்பு தான் இது,

முதலில் சிவாஜி. இதில் நடிகர் திலகம் சிவாஜி நாடிருக்க மாட்டார். மாறாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து மிக பெரிய வெற்றியடைந்து இருக்கும். அடுத்து விரைவில் வெளியாக உள்ள விக்ரம். இது ஏற்கனவே வெளியான கமல் பட தலைப்பு என்றாலும்,

இதையும் படியுங்களேன் – விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, விஜய், சூர்யா.!? ஆண்டவர் மாஸ் சும்மா தெறிக்க போகுது.!

இப்போது அந்த படத்தின் பெயர் நடிகர் சீயான் விக்ரம் பெயர் கொண்டதாக உள்ளது. அடுத்து, சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்து இருந்த மதகஜராஜா (MGR). அடுத்து மாதவன் நடித்துள்ள ஆர்யா திரைப்படத்தில் ஆர்யா நடித்தது இல்லை. இது போல தமிழ் சினிமாவில் தலைப்பு பஞ்சம் வந்து ஹீரோக்கள் பெயரே தலைப்பப்பாக மாறியுள்ளது.

அப்படிதான் விஜய் நடிப்பில் ஆதி (நடிகர் ஆதி பெயர் ), விஷ்ணு (நடிகர் விஷ்ணு விஷால்), சூர்யா நடித்த நந்தா ( நடிகர் நந்தா பெயர்) என லிஸ்ட் மிக பெரிய லிஸ்ட் போய்க்கொண்டு இருக்கிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top