சிவாஜி படங்களுடன் ஒன்றல்ல... ரெண்டல்ல... 33 முறை மோதிய ரஜினி... துரைக்கு தில்ல பாருங்க...
நடிகர் திலகம் சிவாஜி நடித்த படங்களுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படங்கள் 33 தடவை மோதியுள்ளன. அதுல ஜெயிச்சது யாருன்னு பார்ப்போமா...
1977ல் ரஜினிக்கு மூன்று முடிச்சு, சிவாஜிக்கு சித்ரா பௌர்ணமி வந்தது. இதுல ஜெயிச்சது மூன்று முடிச்சு. 1977ல் ரஜினிக்குக் காயத்ரி, சிவாஜிக்கு நாம் பிறந்த மண் ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர். அதே ஆண்டில் தீபாவளிக்கு ரஜினிக்கு ஆறு புஷ்பங்கள், சிவாஜிக்கு அண்ணன் ஒரு கோயில் ரிலீஸ். இதுல சிவாஜி தான் வின்னர்.
1978ல் சிவாஜி நடித்த தியாகம், ரஜினியின் ஆயிரம் ஜென்மங்கள் ரிலீஸ். இதுல சிவாஜி வின்னர். அதே ஆண்டில் சிவாஜியின் புண்ணிய பூமி, ரஜினியின் மாங்குடி மைனர் ரிலீஸ். இதுல சிவாஜி தான் வின்னர்.
இதையும் படிங்க... அண்ணனாவது தம்பியாவது.. இந்த விஷயத்தில் உலகநாயகன் தான் கெத்து…
அதே ஆண்டில் சிவாஜிக்கு ஜெனரல் சக்கரவர்த்தி, ரஜினிக்கு பைரவி ரிலீஸ். இதுல இருவரும் வின்னர். அதே ஆண்டில் சிவாஜிக்கு பைலட் பிரேம்நாத், ரஜினிக்கு தப்புத் தாளங்கள் ரிலீஸ். இதுல சிவாஜி தான் வின்னர்.
அதே ஆண்டில் பைலட் பிரேம்நாத்துடன் ரஜினிக்கு அவள் அப்படித்தான் படமும் ரிலீஸ். அப்போதும் சிவாஜி தான் வின்னர். அதே நேரம் பைலட் பிரேம்நாத்துடன் ரஜினியின் தாய்மீது சத்தியம் வந்தது. அதுல ரஜினி தான் வின்னர்.
அதே 1978ல் சிவாஜியின் ஜஸ்டிஸ் கோபிநாத், ரஜினியின் ப்ரியா ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர். 1979ல் சிவாஜிக்கு கவரிமான், ரஜினிக்கு நினைத்தாலே இனிக்கும் ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர். அதே ஆண்டில் சிவாஜியின் பட்டாக்கத்தி பைரவன், ரஜினியின் அன்னை ஓர் ஆலயம் ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர்.
1980ல் சிவாஜிக்கு ரிஷிமூலம், ரஜினிக்கு பில்லா ரிலீஸ். இதுல ரஜினி வின்னர். அதே ஆண்டில் சிவாஜியின் விஸ்வரூபம், ரஜினியின் பொல்லாதவன் ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர். 1981ல் சிவாஜியின் கல் தூண், ரஜினிக்கு தில்லுமுல்லு ரிலீஸ். இதுல ரஜினி வின்னர்.
அதே ஆண்டில் சிவாஜிக்கு கீழ்வானம் சிவக்கும், ரஜினிக்கு ராணுவ வீரன் ரிலீஸ். இதுல சிவாஜியே வின்னர். 1982ல் சிவாஜிக்கு சங்கிலி, ரஜினிக்கு ரங்கா ரிலீஸ். இதுல ரெண்டும் ஹிட். அதே ஆண்டில் சிவாஜிக்கு தீர்ப்பு, ரஜினிக்கு அந்த நேரத்தில் ரிலீஸ் ஆகி இருந்தது ரங்கா தான். இதுல சிவாஜி தான் வின்னர்.
அதே ஆண்டில் சிவாஜியின் துணை, ரஜினியின் மூன்று முகம் ரிலீஸ். இதுல ரஜினி வின்னர். 1983ல் சிவாஜியின் இமைகள், ரஜினியின் தாய்வீடு ரிலீஸ். இதுல ரஜினி வின்னர்.
அதே ஆண்டில் சிவாஜியின் வெள்ளை ரோஜா, ரஜினியின் தங்கமகன் ரிலீஸ். இதுல ரஜினியே மிகப்பெரிய வெற்றி பெறுகிறார். 1984ல் சிவாஜிக்கு திருப்பம், ரஜினிக்கு நான் மகான் அல்ல ரிலீஸ். இதுல சிவாஜி வின்னர்.
அதே ஆண்டில் சிவாஜியின் வாழ்க்கை, ரஜினியின் தம்பிக்கு எந்த ஊரு ரிலீஸ். இதுல இரண்டுமே வெற்றி தான். அதே ஆண்டின் தீபாவளிக்கு சிவாஜியின் வம்சவிளக்கு, ரஜினியின் நல்லவனுக்கு நல்லவன் ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர். அடுத்தாக 1985ல் சிவாஜியின் நீதியின் நிழல், ரஜினியின் நான் சிகப்பு மனிதன் ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர்.
1986ல் சிவாஜிக்கு சாதனை, ரஜினிக்கு மிஸ்டர் பாரத் ரிலீஸ். இதுல சிவாஜி வின்னர். அதே ஆண்டில் சிவாஜிக்கு ஆனந்தக் கண்ணீர், ரஜினிக்கு நான் அடிமை இல்லை ரிலீஸ். இதுல ரஜினி வின்னர். அதே ஆண்டில் தீபாவளியையொட்டி சிவாஜிக்கு லட்சுமி வந்தாச்சு, ரஜினிக்கு மாவீரன் ரிலீஸ். இதுல சிவாஜி வின்னர்.
இதையும் படிங்க... பாக்கியராஜை பழிவாங்கிய சிவாஜி!.. இப்படியெல்லாம் யோசிப்பாரா?!…
1987ல் சிவாஜிக்கு முத்துக்கள் மூன்று, ரஜினிக்கு வேலைக்காரன் ரிலீஸ். இதுல ரஜினி வின்னர். அதே ஆண்டில் சிவாஜிக்கு கிருஷ்ணன் வந்தான், ரஜினிக்கு ஊர்க்காவலன் ரிலீஸ். இதுல ரஜினியே வெற்றி. அதே ஆண்டில் சிவாஜியின் ஜல்லிக்கட்டு, ரஜினியின் ஊர்க்காவலனும் அதே சமயம் ரிலீஸ் ஆகி இருந்தது.
இதுல சிவாஜியே வின்னர். 1991ல் சிவாஜிக்கு ஞானப்பறவை, ரஜினிக்கு தர்மதுரை ரிலீஸ். இதுல ரஜினி வின்னர். 1992ல் தீபாவளிக்கு தேவர் மகன், ரஜினிக்கு பாண்டியன் ரிலீஸ். இதுல சிவாஜி தான் வின்னர்.