தமிழ் சினிமாவில் உள்ள வாரிசு நடிகர்களில் பிரபு முக்கியமானவர். நடிகர் திலகம் சிவாஜியின் இளைய மகன். 1982ம் ஆண்டு வெளிவந்த ‘சங்கிலி’ திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர்.
அதன்பின் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார். காமெடி, செண்டிமெண்ட், காதல், சண்டை காட்சிகள் என அனைத்திலும் தூள் கிளுப்புவார். இவருக்கென ரசிகர்களே இருந்த காலமுண்டு. எல்லா தரப்பினருக்கும் பிடித்த நடிகராக பிரபு இருந்ததுதான் அவரின் தனித்துவம்.
இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வெற்றி பெற்று வசூலை அள்ளியது. 90களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த பிரபு அதன்பின் மெல்ல மெல்ல குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார். தற்போதும் அதை தொடர்ந்து வருகிறார். அப்பா சிவாஜியுடன் இணைந்தும் பல படங்களில் பிரபு நடித்துள்ளார். ஆனால், எப்போதும் பிரபுவை சிவாஜி கிண்டலடித்து கொண்டேதான் இருந்தார் என்பது தனிக்கதை.
உண்மையில், பிரபுவை ஒலிம்பிக்கில் விளையாட வைத்து இந்தியாவுக்கு பெருமை வாங்கி தரவேண்டும் என்பதுதான் சிவாஜியின் கனவாக இருந்துள்ளது. ஏனெனில், பிரபு குண்டாக இருந்தாலும் கல்லூரி காலத்தில் அத்லெட்டிக் சாம்பியனாக இருந்தவர்.
மேலும், கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து என அனைத்து போட்டிகளிலும் நன்றாக விளையாடி பல கோப்பைகளையும் வாங்கியவர். எனவேதான், சிவாஜிக்கு இப்படி ஒரு ஆசை இருந்துள்ளது. ஆனால், நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் பிரபு நடிகராக மாறிவிட்டார்.
இதையும் படிங்க: வயிறு எரிஞ்சி சாபம் விடுறேன்!.. டேய் பாலா இனிமேலாவது திருந்து!. நான் கடவுள் நடிகர் பேட்டி…
SK 23:…
நடிகர் அஜித்தின்…
நடிகர் யோகிபாபு…
Rajkumar periyasamy:…
மாரி செல்வராஜ்…