Connect with us
sivaji 1

Cinema History

பரிசு பொருளை வைத்து பசியை போக்கிய சம்பவம்.. 12 வயதிலேயே வள்ளலாக இருந்த சிவாஜி..

சிறு வயது முதலே நாடகங்களில் நடிக்க துவங்கியவர்தான் சிவாஜி. அப்போதெல்லாம் பலரும் சிறு வயதிலேயே நாடங்களில் நுழைந்துவிட்டனர். எம்.ஜி.ஆர் கூட 7 வயதில் நாடகத்தில் நுழைந்தார். குடும்பவறுமை ஒருபுறம், நடிப்பின் மீதுள்ள ஆர்வம் ஒருபுறம் என இரண்டுமே அதற்கு காரணமாக இருந்தது.

நாடகங்களில் நடிக்க துவங்கி பராசக்தி திரைப்படம் மூலம் சினிமாவில் நுழைந்து நடிப்பில் நவரசங்களையும் காண்பித்து நடிகர் திலகமாக மாறியவர் சிவாஜி. இவர் ஏற்காத வேடமே இல்லை, போடாத வேஷமே இல்லை என சொல்லுமளவுக்கு பல கதாபாத்திரங்களை கண்முன் கொண்டு வந்தவர். நடிப்பில் பல பரிமாணங்களை காட்டி நடிப்புக்கு இலக்கணமாக மாறிப்போனவர்.

நாடகங்களில் அப்போதெல்லாம் ஆண்களே பெண் கதாபாத்திரத்திலும் நடிப்பார்கள். அவர்களே பெண் குரலிலும் பேசுவார்கள். அதேபோல், ஒருவரே பல வேடங்களிலும் நடிப்பார்கள். 50,60 களில் தமிழ் சினிமாவில் பெரிதாக பேசப்பட்ட பல திரைப்படங்கள் அதற்கு முன்பு நாடகமாக வெளிவந்ததுதான். அதில் சிவாஜி நடித்த மனோகரா திரைப்படமும் ஒன்று.

sivaji

மனோகரா படத்தில் நடிக்கும்போது சிவாஜி வாலிபராக இருந்தார். ஆனால், 12 வயதிலேயே அந்த நாடகத்தில் சிவாஜி நடித்துள்ளார். ஒருமுறை அந்த நாடகத்தில் முதல்நாள் பெண் குரலில் பேசி நடித்த சிவாஜி, அடுத்த நாள் வேறு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். இந்த நாடகத்தை பார்க்க வந்த மகாராஜா என்பவர் சிவாஜியின் நடிப்பை பார்த்து பாராட்டி அவருக்கு ஒரு வெள்ளித்தட்டை பரிசளித்தார். அந்த காலத்தில் அது மிகப்பெரிய பரிசு என்பதால் சிவாஜி அந்த தட்டை தலைக்கு அடியிலேயே வைத்துக்கொண்டு தூங்குவாராம்.

sivaji

அப்போது சிவாஜி நடித்து வந்த நாடகக்குழுவை வறுமை வாட்டியது. பார்த்தது. நாடகத்தில் நடித்த நடிகர்கள் இரவு நேரங்களில் மரவள்ளி கிழங்கை சாப்பிட்டு பசியை போக்கினர். இதைப்பார்த்த சிவாஜி நாடக முதலாளியை அழைத்து தனது வெள்ளித்தட்டை அவரிடம் கொடுத்து இதை விற்று எல்லோருக்கும் சாப்பாடு போடுங்கள் என சொல்லி நெகிழ வைத்தாராம். சிவாஜி பெரிய நடிகராக சம்பாதித்த போது அவர் பலருக்கும் உதவியுள்ளார். இராணுவத்தினருக்கு நிதியும் கொடுத்துள்ளார். இப்போதையை கணக்கில் அது பல கோடி.

ஆனால், அவர் சிறுவனாக இருந்தபோதே கொடைத்தன்மையுடன் இருந்தார் என்பதற்கு இந்த சம்பவம் முக்கிய உதாரணம் ஆகும்.

google news
Continue Reading

More in Cinema History

To Top