தென்னிந்திய சினிமாவிலேயே இவருக்கு நிகரான ஒரு நடிகர் கிடையாது என்கிற பெயரை பெற்றவர் நடிகர் சிவாஜி கணேசன். பொதுவாக அனைத்து நடிகர்களுக்கும் அனைத்து நடிப்புகளும் வந்துவிடாது. ஆனால் சிவாஜி கணேசன் எந்தவிதமான நடிப்பாக இருந்தாலும் எளிதாக அதை நடிக்க கூடியவர். அதனாலேயே அவர் நடிகர் திலகம் என அழைக்கப்படுகிறார்.
அதை பல படங்களில் நிரூபித்தும் காட்டி உள்ளார். பிளாக் அண்ட் ஒயிட் சினிமா முடிந்து கலர் சினிமா காலம் துவங்கிய பொழுது பழைய நடிகர்கள் அனைவரும் புதிய தொழில்நுட்பத்தை பழகுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டனர்.
ஆனால் சிவாஜி கணேசன் மிக எளிமையாக அடுத்த தலைமுறைகளுக்கு ஏற்றார் போல நடிக்க தொடங்கினார். வயதான பிறகு ஒரு முறை சிவாஜி கணேசனுக்கு மாரடைப்பு வந்து விட்டது. அதன் காரணமாக அவரை பார்ப்பதற்காக பாரதிராஜா மருத்துவமனைக்கு சென்று இருந்தார்.
சிவாஜி கூறிய அறிவுரை:
அப்பொழுது சிவாஜி கணேசன் கூறும் பொழுது எப்போதும் போல உறங்கிக் கொண்டிருந்தேன். திடீரென மாரடைப்பு வந்துவிட்டது என விளக்கிக் கொண்டிருந்தவர் பாரதிராஜாவிடம் நீ வீடு கட்டி விட்டாயா? என கேட்டார் பாரதிராஜா இன்னும் இல்லை என கூறியிருக்கிறார். அதற்கு பதில் அளித்த சிவாஜி, வீடு கட்டுவதாக இருந்தால் சின்னதாக கட்டு. ஏனெனில் நான் பெரிய வீடாக கட்டி வைத்துள்ளேன்.
மாரடைப்பு வந்தபோது மிகவும் சத்தமாக என் வீட்டில் இருப்பவர்களை அழைத்தேன். சினிமாவில் எவ்வளவு சத்தமாக அனைவரிடமும் பேசுவேனோ அவ்வளவு சத்தமாக அழைத்தேன். வீட்டில் அனைவருமே இருந்தனர். ஆனால் அவர்கள் யாருமே வரவில்லை. எனவே பெரிய வீடு கட்டிக் கொள்வது நமது உயிருக்கு நல்லதல்ல என சிவாஜி பாரதிராஜாவிற்கு அறிவுரை கூறியுள்ளார்.
நேற்று சோசியல்…
தனது தந்தை…
Sun serials:…
தமிழக வெற்றிக்கழகம்…
தமிழ் சினிமாவில்…