தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவரின் திரைப்பயணம் என்பது அந்த அளவுக்கு சாதாரணமானது கிடையாது. 12 ஆண்டுகளில் 100 படங்களைக் கடந்து ஒரு பெரிய சாதனையாளராக திகழ்ந்தார் சிவாஜி. சிவாஜியின் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ஒவ்வொரு படங்களிலும் கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கும் அதுவும் பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாக இருக்கும்.
ஆங்கிலமே தெரியாத சிவாஜி, படங்களில் அமெரிக்கர்களையே தோற்கும் அளவிற்கு படு ஸ்டைலாக ஆங்கிலத்தில் பேசி கலக்கியிருப்பார். எல்லாம் நடிப்பின் மீது அவருக்கு இருந்த அதீத காதலும் அக்கறையும் தான். பராசக்தி என்ற படத்தின் மூலம் நடிகரான சிவாஜி கணேசன் தொடர்ந்து பல படங்களில் ஹீரோ, வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் என பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர்.
தன்னுடைய அசாத்திய நடிப்பு திறமையால் ரசிகர்கள் அனைவரையும் இன்றளவும் மிகவும் கவர்ந்திருக்கிறார் சிவாஜி. விடுதலை தலைவர்கள், வரலாற்று மன்னர்கள், தெய்வீக கடவுள்கள் என பல வேடங்களில் நடித்துள்ள சிவாஜி அனைவரையும் தன் கண் முன் கொண்டு நிறுத்துவார். அப்படி சிவாஜியை படங்களில் பார்த்த பிறகு தான் ஓ அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் போல என்று நம் நினைவுக்கு வந்துவிடும். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார் சிவாஜி கணேசன்.
கிட்டத்தட்ட மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்து பெருமை பெற்றவர் சிவாஜிகணேசன். காலம் தவறாமை ,ஒழுக்கம், கண்ணியம் போன்றவைகளுக்கு உதாரணமாக திகழ்ந்தவர். இப்படிப்பட்ட சிவாஜியை கிட்டத்தட்ட 17 வருடங்களாக ஆய்வு செய்து தனது ஆய்வு அறிக்கை மூலம் சிவாஜியை பற்றிய பல தகவல்களை புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார் ஆராய்ச்சியாளர் மருதுமோகன்.
வெளியீட்டு விழா கூட மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அந்த விழாவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் கலந்து கொண்டு தங்களுடைய பங்கினை ஆற்றினார்கள். மருதுமோகன் மேலும் சிவாஜியை பற்றி குறிப்பிடும் பொழுது எப்பொழுதும் தன் உடல் பேணலில் கவனமாக இருப்பவர் சிவாஜி கணேசன் என்று கூறியிருக்கிறார். ஆனால் அவர் ஜிம்முக்கு போவதை விரும்பாதவர் என்றும் கூறினார்.
ஏனெனில் ஜிம்முக்கு சென்று அங்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால், அதனால் ஏற்படும் வலியால் படப்பிடிப்பில் உரிய உணர்ச்சிகளோடு நடிக்க முடியாது .அந்த வலி தான் நம் கண் முன் வந்து நிறுத்தும். அதன் காரணமாக நடிப்பில் குறை ஏற்படும் என்பதற்காகவே சிவாஜி ஜிம்முக்கு போவதை விரும்ப மாட்டாராம். வீட்டில் இருந்து கொண்டே கர்லாக்கட்டையை மட்டும் சுற்றிக்கொண்டு இருப்பாராம் சிவாஜி கணேசன்.
இதையும் படிங்க :பாகவதர் நடிப்பை விமர்சனம் செய்த பத்திரிக்கையாளர்!.. தியேட்டருக்கு வரவழைத்து என்ன செய்தார்கள் தெரியுமா?..
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…