சிவாஜியின் நடிப்பை பார்த்து கடுப்பான இயக்குனர்! ‘தேவர்மகன்’ படத்தில் இப்படியெல்லாம் நடந்திருக்கா?
தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் ஆளுமையாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிப்பிற்கு ஒரு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர் . சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வரும் எந்த இளைஞர்களும் சிவாஜியின் ஒவ்வொரு படங்களை பார்த்தால் போதும். எப்படி நடிக்க வேண்டும் எப்படி உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதை மிக எளிதாக அறிந்து கொள்ள முடியும்.
சிவாஜி நடித்த ஒவ்வொரு படங்களும் ஒரு ஒரு பொக்கிஷம் தான். அவற்றையெல்லாம் கருவூலத்தில் வைத்து பத்திரமாக பார்க்கப்பட வேண்டிய ஒன்று. வரலாற்றுக் கதைகள் சரித்திர புராணங்கள் என எந்த ஒரு கதாபாத்திரங்கள் ஆகட்டும் அதை தன் நடிப்பின் மூலம் தத்ரூபமாக வெளிக்கொண்டு வந்தவர் சிவாஜி.
கர்ணனை யாரும் நேரில் பார்த்திருக்க முடியாது. ஆனால் சிவாஜி தன் நடிப்பின் மூலம் அதை கண்ணெதிரே கொண்டு வந்து நிறுத்தினார். அதேபோல வீர அபிமன்யு ,வீரபாண்டிய கட்டபொம்மன், வ உ சி என முக்கிய தலைவர்களை சிவாஜியின் உருவத்தில் தான் இன்றைய தலைமுறையினர் பார்த்து தெரிந்து இருப்பார்கள்.
நடிப்பு அரக்கன் என்று சிவாஜியை கூறி வந்தாலும் அவர் நடிப்பில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் இருக்கத்தான் செய்யும் என்ற கருத்துக்களும் எழுந்தன. அதற்கு உதாரணமாக நடந்த ஒரு சம்பவம் தான் இது. அதாவது பரதன் இயக்கத்தில் சிவாஜி ,கமல், ரேவதி, வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் தேவர்மகன்.
அந்தப் படத்தில் சிவாஜி ஒரு கிராமத்தின் முக்கிய ஆளுமையான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் . கமல் வெளிநாட்டில் படித்து கிராமத்திற்கு வரும் ஒரு இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். வெளிநாட்டில் இருந்து வந்த கமல் அவருடைய அப்பாவான சிவாஜி உடன் உரையாடும் காட்சி. உரையாடி முடித்துவிட்டு வரும்போது தெரியாமல் சறுக்கி விழும் மாதிரியான ஒரு காட்சி.
அந்த காட்சியில் நடிக்கும் போது கமல் சரிக்கி விழ அதைப் பார்த்ததும் நாற்காலியில் உட்கார்ந்திருந்த சிவாஜி திடுக்கிட்டு தடதடவென எழுந்து பார்த்து என்று சொல்லுவாராம். இந்த காட்சி படமாக்கும் போது படத்தின் இயக்குனர் பரதன் கட் கட் கட் என சொல்லிவிட்டாராம்.
உடனே சிவாஜியை பார்த்து பரதன் ஏன் நடிக்கிறீங்க என்று கேட்டிருக்கிறார். அதற்கு சிவாஜி சிவாஜியைபார்த்து ஏன் நடிக்கிறீங்க என கேட்கிறாயா என்று மிகவும் கிண்டலாக கேட்டாராம். அதற்கு பதில் அளித்த பரதன் "இது உங்கள் வீடு. அவர் உங்கள் மகன். இருவரும் ஆரம்ப காலத்தில் இந்த வீட்டில் தான் ஒன்றாக இருந்திருக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது தன்னுடைய மகன் தெரியாமல் விழும்போது ஒரு தகப்பன் சாதாரணமாக டேய் பார்த்துடா என்று தான் சொல்லுவார் .அப்படி நடிங்கள் "என பரதன் கூறினாராம்.
இதையும் படிங்க : தனுஷ் அந்த பழக்கத்தை விட்டுட்டார்!.. பொசுக்குன்னு உண்மையை போட்டு உடைத்த ரோபோ சங்கர்…
இதை கேட்டதும் சிவாஜி நல்ல இயக்குனர் தான் என அருகில் இருந்தவர்களிடம் கூறி பெருமைப்பட்டுக் கொண்டாராம்.