சிவாஜியின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய இயக்குனர்!.. பி.ஆர்.பந்த்லு பிரிவுக்கும் இதுதான் காரணமா?..

by Rohini |
sivaji
X

sivaji br banthlu

கோலிவுட்டில் நடிப்பு அரக்கன் என சொல்லப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிப்பைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்ற அளவிற்கு சினிமா மீதும் தன் நடிப்பின் மீதும் அலாதி பிரியம் கொண்டவர். நடிப்புதான் என் மூச்சு நடிப்புதான் என் பேச்சு என தன் வாழ்க்கையை முழுவதுமாக சினிமாவிற்காகவே அர்ப்பணித்தார். பராசக்தியில் தொடங்கிய தன் சினிமா வாழ்க்கையை படையப்பா வரை கொண்டு சென்று ஏராளமானவர்களின் உள்ளத்தை ஆட்கொண்டார்.

sivaji1

br panthulu

சிவாஜியின் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கிய படமாக அமைந்தது அவர் ஒன்பது வேடங்களில் நடித்து கலக்கிய நவராத்திரி படம். அந்தப் படத்தின் கதையை ஒரு நாடகத்தில் பார்த்த சிவாஜி இந்த மாதிரி நாமும் பல வேடங்களில் ஒரு படத்தில் ஆவது நடிக்க வேண்டும் என்ற ஆசையை கொண்டிருந்தாராம். அந்த காலங்களில் நாடக மேடையில் மிகவும் கோலோச்சிய நடிகராக இருந்தவர் டம்பாச்சாரி. அவர் ஒரு நாடகத்தில் 11 வேடங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று இருந்தாராம். அதைப் பார்த்த சிவாஜிக்கு நாமும் இந்த மாதிரி நடிக்க வேண்டும் என்று ஆசையில் இருந்தாராம்.

அதேசமயம் பிரபல சினிமா இயக்குனரான ஏ பி நாகராஜனும் அந்த நாடகத்தை பார்த்துவிட்டு இந்த மாதிரி ஒரு கதையை நாமும் தயாரிக்க வேண்டும் என எண்ணினாராம். அப்போது ஏபி நாகராஜன் வேற ஒரு நாடகத்திலும் சிவாஜி வேற ஒரு நாடகத்திலும் நடித்துக் கொண்டு இருக்க ஒரு நாள் சிவாஜியைத் தேடி ஏ பி நாகராஜன் ஒரு கதை வைத்திருக்கிறேன் நடிக்கிறீர்களா என கேட்டாராம். அப்போது கதையை கேட்ட சிவாஜிக்கு ஒரே ஆனந்தமாம். நானும் இந்த மாதிரி ஒரு கதையில் தான் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டிருந்தேன். நீங்களே வந்து என்னிடம் கேட்டு விட்டீர்கள். கால்சீட் நான் தருகிறேன் எனக் கூறி அதன் பிறகு உருவானது தான் நவராத்திரி என்ற படம்.

sivaji2

sivaji2

ஏற்கனவே சிவாஜியை வைத்து நாகராஜன் வடிவுக்கு வளைகாப்பு, குலமகள் ராதை என்ற படங்களை தந்தவர். நவராத்திரி படம் சிவாஜி உடன் அவருக்கு மூன்றாவது படமாக அமைந்தது. அதுபோக சிவாஜியின் சினிமா வாழ்க்கையில் நவராத்திரி படம் நூறாவது படமாகவும் அமைந்தது.

இதையும் படிங்க :லால் சலாம் படத்தில் முதலில் நடிக்க வேண்டிய நடிகர் இவர்தான்!… கடைசி நிமிடத்தில் ரஜினி எடுத்த அதிரடி முடிவு…

படத்தில் ஒன்பது வேடங்களில் நடித்த சிவாஜி ஒவ்வொரு கேரக்டரிலும் வந்து வந்து செல்ல எல்லா கதாபாத்திரங்களும் நம் மனதை விட்டு அகலாமல் அப்படியே நின்றது. நவராத்திரி படம் 1964 ஆம் ஆண்டு தீபாவளி அன்று ரிலீஸ் ஆக அந்தப் படத்தோடு எஸ்.எஸ்.ஆர் படமும் சிவாஜியின் முரடன் முத்து என்ற படமும் எம்ஜிஆரின் படகோட்டி என்ற படமும் ஒன்றாக ரிலீஸ் ஆனது. இதில் சிவாஜியை வைத்து பி. ஆர்.பந்துலு முரடன் முத்து என்ற படத்தை நூறாவது படமாக்க வேண்டும் என எண்ணினாராம் .ஆனால் சிவாஜி தனது நீண்ட நாள் கனவான நவராத்திரி படம் தான் தனக்கு நூறாவது படமாக அமைய வேண்டும் என நினைத்து அந்த படத்தில் நடித்தாராம். இதனாலேயே பி ஆர் பந்துலுவுக்கும் சிவாஜிக்கும் இடையே ஒரு விரிசல் ஏற்பட்டது என்று இந்த கட்டுரையை வடித்த மருது மோகன் கூறினார்.

sivaji3

sivaji3

Next Story