‘அழுமூஞ்சி நடிகர்’ பட்டத்தோடு சுற்றிய சிவாஜி!.. அதைமாற்ற புதிய ட்ரிக்கை யோசித்த நடிகர் திலகம்!...
தமிழ் சினிமாவின் பெருமையாக கருதப்பட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். குடும்ப உறவுகளை தாங்கி இவர் நடிக்கும் நடிப்பில் அத்தனை குடும்பங்களும் ரசிகர்கள் தான். அந்த அளவுக்கு செண்டிமெண்டான கதைகளில் நடித்து சில சமயம் ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்துவார்.
அதற்கு ஒரு சிறந்த உதாரணமான படம் பாசமலர். பாசமலரை படத்தை பார்த்து அழாதவர்கள் இல்லை. அந்த அளவுக்கு நடிப்பு அரக்கனாக இருந்தவர். ஒரு சமயம் இயக்குனர் ஸ்ரீதரின் திருமணத்திற்கு சிவாஜியால் கலந்து கொள்ளமுடியவில்லையாம். அவர் அப்போது கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூரில் இருந்திருக்கிறார்.
இதையும் படிங்க : தில் ராஜுவுக்கு போட்டியாக போனிகபூர்!.. நான் சொல்றேன் யாரு No:1னு!!..
அதனால் தன் குடும்பங்களை அனுப்பிவிட்டு டிரங்காலில் ஸ்ரீதருக்கு வாழ்த்துக்கள் சொன்னதோடு ஜெய்ப்பூரில் இருந்து வந்த கையோடு ஸ்ரீதருக்கும் அவரது மனைவிக்கும் தன் வீட்டிலேயே விருந்துக்கும் ஏற்பாடு செய்தாராம் சிவாஜி. அப்போது கமலாம்பாள் ஒரு தங்கச்சங்கிலியை ஸ்ரீதரின் மனைவிக்கு பரிசாக கொடுத்தாராம்.
கூடவே சிவாஜி ஸ்ரீதரின் மனைவிக்கும் ஸ்ரீதருக்கு அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். அதன் பின் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அவரை அழைத்து சிவாஜி ‘அழுமூஞ்சி டைரக்டர்’ என்ற பெயரை இந்த படத்தின் மூலம் நீக்கி ரசிகர்களின் மூஞ்சில் கரியை பூசிவிட்டாய். எனக்கும் அந்த பெயர் உள்ளது. நான் கால்ஷீட் தருகிறேன். ஒர் காமெடி படம் எடு என்று சிவாஜி சொன்னாராம்.
உடனே காலமெல்லாம் காத்திருப்பேன் என்ற பெயரில் ஒரு கதையை சிவாஜிக்காக நீண்ட நாள்களுக்கு ஒதுக்கி வைத்தே காத்திருக்க இருவரும் சினிமாவில் பிஸியாக இருந்தார்கள். அதன் பின் அந்த பெயர் ஊட்டி வரை உறவு என்ற தலைப்பில் படமாக வெளியாகி சக்கை போடு போட்டது. இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.