சிவகார்த்திகேயன் கடனை அடைக்கும் சன் பிக்சர்ஸ்....பட் அந்த டீலிங் பிடிச்சிருக்கு!.....

by சிவா |
sivakarthikeyan
X

விஜய் டிவியிலிருந்து போராடி சினிமாவுக்கு வந்தவர் சிவகார்த்திகேயன். துவக்கத்தில் அவர் நடித்த சில திரைப்படங்கள் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை என்றாலும், எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு பிடித்த நடிகராக மாறினார். அவரின் மார்கெட்டும் வேகமாக ஏறியது.

sivakarthikeyan

இதன் தொடர்ச்சியாக சொந்த பணத்தில் சில படங்களை தயாரித்தார். அதில் 100 கோடி வரை அவருக்கு கடன் ஏற்பட்டது. எனவே, அவரின் ஒவ்வொரு படமும் வெளியாகும் போது அவருக்கு பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது. தற்போது வரை அவரது கடன் தீர்ந்தபாடில்லை.

இந்நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவருக்கு கை கொடுத்திருக்கிறது. உங்கள் கடன் அனைத்தையும் நாங்கள் செலுத்தி விடுகிறோம். அதற்கு பதிலாக எங்கள் நிறுவனத்திற்கு 3 படங்கள் நடித்து கொடுங்கள் என அவரிடம் கேட்டிருக்கிறதாம். இதற்கு சிவகார்த்திகேயனும் சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

Sivakarthikeyan

காலா படத்தை தயாரித்ததில் கடன் ஏற்பட்டு, தயாரிப்பாளர் தாணுவுக்கு 3 படங்கள் நடித்து கொடுக்க தனுஷ் சம்மதம் தெரிவித்து அசுரன், கர்ணன், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது மாவீரன், அயலான் ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story