தமிழில் பத்தாது... தெலுங்கில் கல்லா கட்டபோகும் சிவகார்த்திகேயன்

by adminram |   ( Updated:2021-10-09 07:36:46  )
sivakarthikeyan
X

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயன் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். பெரும்பாலும் இவருக்கு குழந்தைகள் ரசிகர்களை அதிகமாக உள்ளனர். இவரும் குழந்தைகளை கவர்வதுபோலவே படம் நடித்து வருகிறார்.

குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்கள் குழந்தைகளிடம் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது. ஆனால், கடைசியாக இவர் நடித்த படங்கள் ஏதும் சரியாக ஓடவில்லை.

நயன்தாராவின் திடீர் முடிவால் கலக்கத்தில் தயாரிப்பாளர்கள்…..

குறிப்பாக சீமராஜா, மிஸ்டர் லோக்கல், ஹீரோ ஆகிய படங்கள் இவரது கெரியரில் மிகப்பெரிய தோல்விப்படங்களாக அமைந்தன. ஏற்கனவே இவரை வைத்து 2 ஹிட் கொடுத்த பொன்ராம் இயக்கியதால் சீமராஜா படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

sivakarthikeyan

sivakarthikeyan

இதில் சமந்தா, கீர்த்தி சுரேஷ் என இரண்டு நாயகிகள் நடித்திருந்தும் இப்படம் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது. தற்போது இவர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 'டாக்டர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் இன்று வெளியானது.

தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கில் இப்படம் 'வருண் டாக்டர்' என்ற பெயரில் வெளியாகியுள்ளது.. இதற்காக இப்படத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் சமீபத்தில் அங்கு புரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிவகார்த்திகேயன், இயக்குனர் நெல்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதே மாவு…அதே தோசை…கோலமாவு கோகிலாவை திருப்பி போட்டா டாக்டர்!….

அப்போது பேசிய சிவகார்த்திகேயன், வெறும் டாக்டர் படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேப்பை கொடுத்துள்ளனர், அதற்கு மிகப்பெரிய நன்றி என கூறினார். மேலும், தற்போது தான் தெலுங்கு கற்று வருவதாகவும், விரைவில் தெலுங்குப்படத்தில் நடிக்கப்போவதாகவும் கூறினார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story