கமலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்... சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சினிமாவை பொருத்தவரை யாருக்கு எப்போது எப்படி அதிர்ஷ்டம் அடிக்கும் என்றே தெரியாது. அந்த வகையில் பெரிய நடிகர் அல்லது இயக்குனரின் வாரிசாக சினிமாவில் அறிமுகமாகி காணாமல் போனவர்களும் உள்ளனர். எந்தவித பின்புலமும் இல்லாமல் சொந்த முயற்சியில் சினிமாவில் அறிமுகமாகி சாதித்தவர்களும் உள்ளனர்.
அந்த வகையில் சின்னத்திரையில் அறிமுகமாகி தனது திறமையால் தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் இளம் நடிகர் தான் சிவகார்த்திகேயன். மிக குறுகிய காலத்தில் உச்சம் தொட்ட நடிகரும் இவர்தான். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்தது.
இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் எகிறி விட்டது. தற்போது சிவகார்த்திகேயன் டான், அயலான், சிங்கப்பாதை உள்ளிட்ட படங்களிலும், ஒரு நேரடி தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர தற்போது புதிய படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகி உள்ளாராம்.
அதன்படி சிவகார்த்திகேயன் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு 30 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தான் இப்படத்தை இயக்க உள்ளாராம்.
இயக்குனர் ராஜ்குமார் தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பணியாற்றி வருகிறாராம். அதுமட்டுமின்றி விஜய் டிவியில் பணியாற்றும் போதே ராஜ்குமார் பெரியசாமியும், சிவகார்த்திகேயனும் நல்ல நண்பர்களாக பழகியுள்ளார்களாம். அதன் விளைவாக கூட இந்த கூட்டணி அமைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.