சிவகார்த்திகேயனின் மனசே மனசு!.. 3 குழந்தைகள் மட்டுமின்றி அவரோட ஃபேமிலி பெருசாகிடுச்சே!

நடிகர் சிவகார்த்திகேயன் முன்னதாகவே வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள அனு என்னும் பெண் வெள்ளை புலியை 2018ம் ஆண்டே தத்தெடுத்திருந்தார். அதை தொடர்ந்து 6 மாதங்களுக்கு ஒரு முறை ஏதேனும் விலங்குகளை பராமரிப்பதற்காக நிதியளித்து வருகிறார். மேலும், தற்போது ஒரு புலி மற்றும் சிங்கத்தை 3 மாதங்களுக்கு தத்தெடுத்துள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் இருந்து தன் உழைப்பால் கடுமையாக உழைத்து தற்போது முன்னணி நடிகராக முன்னேறியுள்ளார் சிவகார்த்திகேயன். மெரினா படத்தில் தொடங்கிய அவரது திரைப்பயணம் ’3’, மனம் கொத்திப் பறவை, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் காராத்தே என சீரான வளர்ச்சியை அடைந்தது. ரெமோ படத்தில் பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்து அவருக்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது.

மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன் உள்ளிட்ட சில படங்களில் பாடகராகவும் மாறி தனது திறமையை உலகுக்கு காட்டினார். மேலும், கனா, குரங்கு பெடல், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ் ஆகிய படங்களை தயாரித்தும் உள்ளார். அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி, இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என அவருடைய ரேஞ்சே மாறிவருகிறது.
சிவகார்த்திக்கேயன் அனு என்னும் பெண் புலியை தொடர்ந்து விஷ்ணு என்ற சிங்கத்தையும் பிராக்கிரிதி என்ற யானையையும் தத்தெடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது ஷெர்யார் என்கிற சிங்கத்தையும், யுகா என்கிற புலியையும் 3 மாதங்களுக்கு தத்தெடுத்துள்ளார். தொடர்ந்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் வாழ்ந்து வரும் புலி, சிங்கங்கள் மீது சிவகார்த்திகேயன் காட்டும் அன்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.