சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படம் ரஜினிகாந்த் திரைப்படத்தின் வசூலையே முந்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன்: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்த இவருக்கு அமரன் திரைப்படம் அவரை தமிழ் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்று விட்டது என்று தான் கூற வேண்டும். இதனால் இவரின் மார்க்கெட் தற்போது உச்சத்திற்கு சென்று விட்டது என்று தான் கூற வேண்டும்.
அமரன் திரைப்படம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான திரைப்படம் அமரன். நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கின்றார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.
இதையும் படிங்க: அரசியலுக்கு போன விஜய்!.. விஜய் சேதுபதி மகன் படத்துக்கு வந்த சிக்கல்!.. அட பாவமே!…
கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது. படம் தீபாவளிக்கு வெளியான முதலே திரையரங்குகளில் சக்க போடு போட்டு வருகின்றது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது.
படத்தின் வசூல்: அமரன் திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 42.3 ரூபாயை வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து படம் வெளியாகி மூன்று நாட்களில் உலக அளவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. 9-வது நாளான நேற்று 200 கோடி ரூபாயை வசூல் செய்திருந்தது. இதைத்தொடர்ந்து 10-வது நாளான இன்று உலகம் முழுவதும் 205 முதல் 210 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.
இந்தியாவில் மட்டும் 150 கோடி முதல் 160 கோடி வரை வசூல் செய்திருக்கின்றது. தமிழகத்தில் இந்த திரைப்படம் 102.28 கோடி ரூபாயை வசூல் செய்து இருக்கின்றது. சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களிலேயே அதிகம் வசூல் செய்த படம் என்கின்ற பெருமையை அமரன் பெற்றிருக்கின்றது.
ரஜினியின் வேட்டையன்: அமரன் திரைப்படம் 10 நாட்களில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த வேட்டையன் திரைப்படத்தின் லைஃப் டைம் வசூலை முறியடித்து இருக்கின்றது. வேட்டையன் திரைப்படம் வெளியாகி தமிழ்நாட்டில் 100 கோடி வசூலை எட்ட முடியாமல் திணறியது. ஆனால் அமரன் திரைப்படம் வெளியான 10 நாட்களிலேயே அந்த இலக்கை அடைந்து சாதனை படைத்திருக்கின்றது.
இதையும் படிங்க: தளபதி 69 படம் எடுக்க பணம் இல்லையா?!.. இதுக்கா இவ்ளோ பில்டப் பண்ணீங்க!…
தமிழகத்தில் 102 கோடி வசூல் செய்து கோட் படத்துக்கு அடுத்தபடியாக அமரன் திரைப்படம் இடம் பிடித்திருக்கின்றது. இதனால் தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் மிகப்பெரிய அளவில் உயர்ந்து இருக்கின்றது. இன்னும் திரையரங்குகளில் அமரன் திரைப்படம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் விரைவில் 250 கோடியை எட்டுவதற்கும் வாய்ப்பு இருக்கின்றது என கூறப்பட்டு வருகின்றது.
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…