Cinema News
பட்டையை கிளப்பிய அமரன்!.. இதுதான் ஒரிஜினல் சக்சஸ் மீட்?!… ஸ்பெஷல் கெஸ்ட் யார் தெரியுமா?!..
அமரன் திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள காரணத்தால் விரைவில் மிக பிரம்மாண்டமாக வெற்றி விழா நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் அனைவரும் கொண்டாடும் திரைப்படமாக அமைந்திருந்தது அமரன். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருந்த அமரன் திரைப்படம் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்து வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் ராஜ்குமார் பெரியசாமி.
இதையும் படிங்க: ரஜினி – சீமான் ரெண்டு பேருமே போட்ட ஸ்கெட்ச்!.. சந்திப்பு நடந்ததன் பின்னணி!..
மேலும் கமலஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது. படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 நாட்களை தாண்டிய நிலையில் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு அனைவரையும் நெகிழ வைத்திருக்கின்றது.
அவர்கள் உண்மை கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்பது பலருடைய கருத்து. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்த திரைப்படத்திற்கு அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கின்றது. படம் வெளியான மூன்று நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.
தற்போது வரை உலக அளவில் 315 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தில் மட்டும் 150 கோடி ரூபாயை இந்த திரைப்படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. சிவகார்த்திகேயன் கெரியரிலேயே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ஒரு முக்கிய படமாக மாறி இருக்கின்றது அமரன் திரைப்படம். இந்த திரைப்படம் வெளியாகி 100 கோடி வசூல் செய்துள்ள பிறகு படக்குழுவினர் வெற்றி நிகழ்ச்சி நடத்தி இருந்தார்கள்.
இருப்பினும் தற்போது 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள காரணத்தால் மிக பிரம்மாண்டமாக அனைவருக்கும் நினைவு சின்னம் கொடுக்கும் வகையில் பெரிய அளவில் வெற்றி விழா நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நடிகர் கமலஹாசன் தற்போது அமெரிக்கா சென்று உள்ள நிலையில் அவர் திரும்பிய உடனே இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு முடிவு செய்து இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: நிறைய பேரு கேட்டாங்க!.. எங்க அப்பாவ விட்டுடுங்க?!.. எஸ்பிபி-யின் மகன் என்ன சொல்லிருக்காரு பாருங்க!…
மேலும் இந்த விழாவிற்கு முதல்வர் மு க ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக வரவேண்டும் என்பதற்காக அவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றதாம். ஏனென்றால் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு முதன்முதலாக தனது விமர்சனத்தை பதிவு செய்தவர் முதல்வர் மு க ஸ்டாலின். அவர் தலைமை தாங்கி இந்த நிகழ்ச்சியை நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்று படக்குழுவினர் யோசித்து இருக்கிறார்களாம். இதற்காக அவரிடம் தேதி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.