More
Categories: Cinema News latest news

அமரன் ஓடிடி ரிலீஸுக்கு தேதி குறித்த கமல்?!.. அவ்வளவு சொல்லியும் கேட்கலயே!…

Amaran: தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியான திரைப்படம்தான் அமரன். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியிருந்தார். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாதிகளை களையெடுத்த தமிழர் முகுந்த் வரதராஜனின் கதை இது.

முகுந்த் வரதராஜனின் உண்மை கதை என்பதால் காஷ்மீரில் உண்மையாகவே அவர் பணியாற்றிய இடங்களுக்கு சென்று பல காட்சிகளையும் எடுத்திருந்தார்கள். முகுந்தின் மனைவி இந்து ரெபகா வர்கீஸ் வேடத்தில் சாய் பல்லவி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: வில்லனாக வந்த விஜய்!.. கடைசி நேரத்தில் பின் வங்கிய குட்டி சூர்யா படம்!…

ஜிவி பிரகாஷ் சிறப்பான பின்னணி இசையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. படம் வெளியாகி 13 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் 250 கோடி வசூலை தாண்டியிருக்கிறது. சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் அமரனே அதிக வசூலை பெற்றிருக்கிறது.

வழக்கமாக லூட்டி அடிக்கும் வேடத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் முகுந்த் வரதராஜனாக மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார். அவரின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். பொதுவாக ஒரு திரைப்படம் தியேட்டரில் வெளியாகி 4 வாரங்கள் கழித்து அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களில் வெளியாவது வழக்கம்.

அதுபோல அமரன் படத்தை நவம்பர் 29ம் தேதி ஓடிடியில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், அமரன் படம் வெளியாகி 13 நாட்கள் ஆகியும் தியேட்டரில் கூட்டம் குறையவில்லை. சமூகவலைத்தளங்களில் பலரும் இப்படத்தை பாராட்டி வருவதால் குடும்பத்தோடு பலரும் இப்படத்தை சென்று பார்த்து வருகிறார்கள்.

#image_title

எனவே, 8 வாரங்கள் கழித்து அமரன் படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டும் என தியேட்டர் அதிபர்கள் ராஜ்கமல் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்தது. இந்நிலையில், டிசம்பர் 5ம் தேதி அமரன் படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக இப்போது செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது அமரன் படம் வெளியாகி 5வது வாரத்தில் ஓடிடியில் வெளியாகிறது.

ஆனாலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த தகவலை இதுவரை உறுதி செய்யவில்லை. ஏனெனில், ஓடிடி நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை மாற்ற முடியாது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சாய்பல்லவியின் கிரஷ் யாரு தெரியுமா? அட இவ்ளோ ஓப்பனா சொல்றாங்க.. மனைவிக்கு தெரிஞ்சா?

Published by
சிவா

Recent Posts