சிவகார்த்திகேயன் சீரியஸா பேசும் போது மட்டும் ஏன் சிரிப்பு வருது!.. ’அமரன்’ அமர்க்களப்படுத்துமா?

சிவகார்த்திகேயனை சிரிப்பு போலீசாக பார்த்துவிட்டு சீரியஸான ராணுவ வீரராக பார்க்கும்போது லுக் வைஸ் செட்டாக இருந்தாலும் அவரது வாய்ஸ் வரும்போது சற்று சிரிப்பு வரத்தான் செய்கிறது.

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள சிவகார்த்திகேயனின் 21-வது படத்திற்கு கார்த்தி நடிப்பில் வெளியான அமரன் என்னும் தலைப்பையே வைத்துள்ளனர்.
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜன் என்னும் ராணுவ வீரர்களின் கதையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருக்கிறது.

இதையும் படிங்க: பிரீத்தா ஜிந்தாவ விட நீ க்யூட்டு!.. ரீல்ஸ் வீடியோ போட்டு சூடேத்தும் கேப்ரியல்லா…

ராணுவ வீரராக தன்னை மாற்றிக் கொள்ள சிவகார்த்திகேயன் கடுமையான உடல் உழைப்பை போட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. டைட்டில் டீசரில் இடம்பெற்றுள்ள ஒரு குரல் சற்று ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்கிறது. ஆனால் முழு படத்தில் பார்க்கும்போது அது சரியாக புரிந்து விட்டால் அமரன் நிச்சயம் அமர்க்களப் படுத்தும்.

சூர்யா போன்ற நடிகர்கள் இதுபோன்ற கதைக்களத்தை ஏற்று நடித்தால் கச்சிதமாக அமையும் என்பது சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது. சீமராஜா படத்தில் திடீரென பிளாஷ்பேக்கில் அந்த சீமைக்கே ராஜா நான் தான் என கடம்பவேல் ராஜா கதாபாத்திரத்தில் பாகுபலி லெவலுக்கு சிவகார்த்திகேயன் நடித்திருப்பார். ஆனால் அது அவருக்கு சரியாக செட் ஆகவில்லை. அதுபோல ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் இந்தப் படமும் ஹீரோ, அயலான் போல அடிவாங்கும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க: வெறித்தனமா மாறிய எஸ்.கே!.. வெளியானது அமரன் டைட்டில் டீசர்!.. சும்மா மிரள வைக்குதே!..

ஆனால், எப்படியாவது தன்னை டயர் ஒன் நடிகராக மாற்றும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் சிவகார்த்திகேயனின் உழைப்பை யாரும் குறைவாக எடைபோடக் கூடாது. நல்ல உழைப்புக்கு ஏற்ற பலன் நிச்சயம் கிடைக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை. அமரன் படமும் அவருக்கான அங்கீகாரத்தை கொடுக்கும் என்றே எதிர்பார்க்கலாம். சிவகார்த்திகேயனை தாண்டி ராஜ்குமார் பெரியசாமியின் உழைப்பு பெரிதாக தெரிகிறது.

 

Related Articles

Next Story