முருகதாஸ் படத்தில் விஜய் பட வில்லன்!. அவர்கிட்ட அடி தாங்குவாரா நம்ம எஸ்.கே?!..

Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் பல மொழியில் இருந்து நடிகர்கள் வந்து நடிப்பது வாடிக்கையாகி இருக்கும் நிலையில், அந்த ஐடியாவை தற்போது சிவகார்த்திகேயனும் செய்ய இருக்கும் தகவல் அவர் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்து இருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் பல வருடத்துக்கு முன்னர் உருவான அயலான் திரைப்படம் உருட்டி, உருட்டி கடைசியில் தற்போது பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். அதிலும் நிறைய சிக்கல்கள் இருக்கிறதாம். கிட்டத்தட்ட இன்னும் சில கோடி கடன்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருந்தும், அதை முடித்து ரிலீஸ் செய்ய படக்குழு கடும் போராடி வருகிறதாம்.
இதையும் படிங்க: நயன் சம்பளத்தில் 10 சதவீதம் கூட வசூலிக்காத அன்னப்பூரணி!.. இதுல லேடி சூப்பர்ஸ்டார் பட்டம் வேணுமாம்!..
இப்படத்தினை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவா நடிக்கும் 21வது படம் வரும் வருடத்தில் தான் உருவாக இருக்கிறது. இப்படத்தில் சாய் பல்லவி அவருடன் ஜோடி போடுகிறார். கமர்சியல் நாயகனான சிவா இப்படத்தில் ஆர்மி ஆபிஷராக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படத்தினை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது.
இப்படத்தினை அடுத்து பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். கடைசியாக 2020ம் ஆண்டு ரஜினியை வைத்து தர்பார் படத்தினை முருகதாஸ் இயக்கி இருந்தார். வசூல் ரீதியாக ஹிட் அடித்தாலும் கதையில் படம் மிகப்பெரிய தோல்வி படமாகவே அமைந்தது. தற்போது சில வருடம் கழித்து கோலிவுட்டில் ரீ எண்ட்ரி கொடுத்து இருப்பதால் முருகதாஸ் மீது எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
இதையும் படிங்க: இது கன்பார்ம்!..தளபதி68 பட டைட்டில் இதுதான்.. கமலுக்கு செம டஃபா இருக்குமே!…
இப்படத்தில் சிவாவிற்கு மிருணாள் தாகூர் ஜோடியாக நடிக்க இருக்கிறார். பிரபல மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். மேலும், சிவாவிற்கு வில்லனாக பாலிவுட் நடிகர் வித்யூத் ஜமால் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. அவரிடம் படக்குழு பேச்சுவார்த்தையில் இருக்கிறதாம். இவர் ஏற்கனவே துப்பாக்கி, அஞ்சான் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
இதை தொடர்ந்து, அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் இப்படத்தினை தயாரிக்கிறது. சமீபத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ஏ.ஆர்.முருகதாஸ் படம் முதற்கட்ட வேலைகளில் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.