வாரிசு படத்திற்கு நடந்ததை போலவே கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படங்களை ஒரே நாளில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இங்கே ரிலீஸ் ஆன ஜனவரி 12ம் தேதியே வெளியிட அனுமதிக்கவில்லை.
டோலிவுட்டில் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் ஒட்டுமொத்த தியேட்டர்களையும் பிடுங்கிக் கொண்டாலும் அந்த படம் நல்லா இல்லை என்பதால், குறைவான எண்ணிக்கையில் தியேட்டர் கிடைத்தாலும் படத்தின் வெற்றியால் ஹனுமான் திரைப்படம் அதிக தியேட்டர்களை தற்போது ஆக்கிரமித்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: 96 மாதிரி இருக்குமா? டைட்டிலேயே தெரியுதே.. கார்த்தியின் அடுத்த பட தலைப்பு இதுதான்
ஆனால், கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படங்களுக்கு அது கூட கிடைக்கவில்லை. இந்நிலையில், வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு தான் தெலுங்கில் அயலான் மற்றும் கேப்டன் மில்லர் ரிலீஸ் ஆக உள்ளன.
ஜனவரி 25ம் தேதி தனுஷின் கேப்டன் மில்லர் தெலுங்கில் வெளியாக உள்ளது. ஜனவரி 26ம் தேதி சிவகார்த்திகேயனின் அயலான் படம் தெலுங்கில் வெளியாகிறது. தமிழில் கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படங்கள் இடையே கடும் போட்டி பாக்ஸ் ஆபிஸில் நிலவிய நிலையில், இரண்டு படங்களும் 50 கோடி வசூலை கடந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எப்பேற்பட்ட சூப்பர் ஸ்டாரு? பொங்கி எழுந்த ரசிகர்கள்.. ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்கு வந்த சோதனை
தெலுங்கில் இந்த இரு படங்களும் வெளியாகும் நிலையில், மேலும், சில கோடிகளை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. டோலிவுட்டில் இந்த இரண்டு படங்களில் யார் வசூல் குவிக்கப் போகிறார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
டோலிவுட் ரசிகர்களுக்கு துப்பாக்கி சத்தம் படமும் பிடிக்கும். அதே போல காமெடி படமும் பிடிக்கும் என்பதால் அங்கேயும் முன்னதாகவே கணிக்க முடியவில்லை என்கின்றனர்.
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…