மதுரையில் ரசிகர்களிடம் அடிவாங்கிய சிவகார்த்திகேயன்.!? நடந்தது இதுதானா?

by Manikandan |
மதுரையில் ரசிகர்களிடம் அடிவாங்கிய சிவகார்த்திகேயன்.!? நடந்தது இதுதானா?
X

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் 2015ஆம் வருடம் மதுரை விமானநிலையத்தில் கமல் ரசிகர்களால் சிவகார்த்திகேயன் தாக்கப்பட்டார் என்ற செய்தி அப்போது சினிமா வட்டாரத்தில் பூதாகரமாக வெடித்தது. ஏன் அப்படி நடந்தது? பின்னர் கமலஹாசனுக்கு இந்த விஷயம் தெரியவரவே அவர் சிவகார்த்திகேயனிடம் தனது நண்பர்கள் மூலம் வருத்தத்தை பகிர்ந்து கொண்டார் என்ற பல செய்திகள் உலா வந்தன.

சிவகார்த்திகேயன் ஒரு முறை விஜய் டிவி அவார்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரை தொகுப்பாளர் ஒரு பாடல் சொல்ல பாட கேட்டுள்ளார். அப்போது அவர் எனக்கு ஸ்ருதி வராது என்பது போல கூறியுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் நீங்கள் கூப்பிட்டால் சுருதி வராமலா இருக்கும் என்பதுபோல கமெண்ட் அடித்துள்ளனர். அந்த வீடியோ பகுதி மட்டும் கமலின் தலையீட்டால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவில்லை. ஆனால் அந்த செய்தி பலருக்கு தெரிந்து விட்டது.

அதேபோல வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் ஒரு காட்சியில், 'திருவிழாவில் ரெக்கார்ட் டான்ஸ் வைக்கவில்லை என்றால் நான் இந்த நாட்டை விட்டுச் செல்வது தவிர எனக்கு வேற வழி இல்லை' என்பதுபோல டயலாக் பேசுவார் சிவா. விஸ்வரூபம் பட பிரச்சினை வந்தபோது கமல்ஹாசன், தான் இந்த நாட்டை விட்டு செல்வதாக அறிவித்தார். அதனை ஒப்பிட்டு சிவகார்த்திகேயன் கமலை கிண்டலாக பேசியதாக அப்போது பேசப்பட்டது.

இந்த விஷயங்களை எல்லாம் மனதில் வைத்து கொண்டு அதே வருடம் கமல் ரசிகர்கள் சிவகார்த்திகேன் மதுரை ஏர்போர்ட் வந்த போது அவரை தாக்கி விட்டனர் ஆனால் சிவகார்த்திகேயன் இதனை பெரிதுபடுத்த வேண்டாம் எனக் கூறி காவல் நிலையத்தில் புகார் கூட அளிக்காமல் சென்றுவிட்டார்.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் கமல்ஹாசனும் சிவகார்த்திகேயனும் அன்று ஒரே விமானத்தில், ஒரே நிகழ்ச்சிக்கு தான் வந்து இறங்கினார். கமலஹாசன் சென்ற அடுத்த ஐந்தாவது நிமிடம் சிவகார்த்திகேயன் வெளியே வந்துள்ளார். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Next Story