Categories: Cinema News latest news

தீபாவளி ரேஸில் மோதும் நடிகர்கள்… விஜய் இடம் யாருக்கு?

வருடாவருடம் தீபாவளி மற்றும் பொங்கல் விடுமுறை தினங்களில் பெரிய நடிகர்களின் படங்கள் களமிறங்குவது வழக்கம். ஆனால் இந்த தீபாவளி சற்று களையிழந்து காணப்படுகிறது.

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் செப்டம்பர் மாதமே வெளியாவதும், ரஜினியின் வேட்டையன் அக்டோபர் மாதம் வருவதும் தான் இதற்கு பெரிய காரணமாகும். மறுபுறம் அஜித் விடாமுயற்சியுடன் மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார்.

மகிழ் திருமேனி பொறுமையின் மறு உருவம் என்பதால் விடாமுயற்சி தீபாவளிக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இந்த நேரத்தில் தற்போது தீபாவளி பந்தயத்தில் களமிறங்கும் படங்களின் பட்டியல் குறித்து தெரிய வந்துள்ளது.

அதன்படி சிவகார்த்திகேயன் அமரனுடன் வர கவின் பிளடி பெக்கர் படத்துடன் களத்தில் குதிக்கிறார். இன்னொருபுறம் ஜெயம் ரவி பிரதர் படத்துடன் வருகிறார். தற்போது வரை இந்த 3 படங்களும் தீபாவளிக்கு உறுதியாகி உள்ளன.

வரும் நாட்களில் வேறு நடிகர்கள் யாரேனும் இந்த ரேஸில் கலந்து கொள்கிறார்களா? என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  முன்பெல்லாம் தீபாவளி என்றாலே விஜய் படங்கள் அந்த லிஸ்டில் இருக்கும் சர்கார், பிகில், மெர்சல் என நாம் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் அவர் அரசியல் கட்சி ஆரம்பித்து இருப்பதாலும், இன்னும் 1 படத்துடன் நடிப்பிற்கு முழுக்கு போடுவதாலும் அடுத்து அவர் இடத்தை பிடிக்கப்போவது யார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Published by
manju