இப்போது லைம் லைட்டில் அதிகமாக பேசப்படும் நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். அதுவும் அமரன் திரைப்படம் அவருடைய வாழ்க்கையை திருப்பி போட்டது என்று சொல்லலாம் .அந்த அளவுக்கு சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குள்ளும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமரன் படத்தில் சிவகார்த்திகேயனை பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும் மேஜர் முகுந்து வரதராஜனாகவே பார்க்க ஆரம்பித்து விட்டனர் .
அந்த அளவுக்கு அமரன் திரைப்படத்தில் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்திருந்தார் சிவகார்த்திகேயன். அந்தப் படமும் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் பயணம் வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் .அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி இருக்கிறார். ஏற்கனவே ஏ ஆர் முருகதாசுடன் ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: ரஜினிக்காக கதை சொன்ன டி.ஆர்…. எப்படியாப்பட்ட படம்? இப்படியா மிஸ் பண்ணுவாரு சூப்பர்ஸ்டார்?
அதற்கு பிறகு சிபிச் சக்கரவர்த்தியுடன் ஒரு படத்தில் நடிக்க போகிறார் .அந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் தான் நடைபெற்றது. அதற்கு அடுத்தபடியாக சுதா கொங்கராவுடன் ஒரு படத்தில் இணைய இருக்கிறார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் அந்தப் படம் முக்கால்வாசி முடிந்த நிலையில் இன்னும் 40 நாட்கள் தான் படப்பிடிப்பு இருக்கிறதாம்.
அதே நேரத்தில் சிபிச் சக்கரவர்த்தி இயக்கும் படத்திலும் நடித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் சுதா கொங்கரா உடனான படத்தின் பூஜை இன்னும் சில நாட்களில் போடப்படுகிறது. இந்த நிலையில் சுதா கொங்கரா சிவகார்த்திகேயனிடம் பிரெஞ்சு தாடி வைக்க வேண்டும் என கூறினாராம் .உடனே சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் சிபிச் சக்கரவர்த்தி ஆகியோர் இயக்கும் படங்களில் ஒரே மாதிரியான கெட்டப் என்பதால் பிரெஞ்சு தாடி வைக்க முடியாது என மறுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: ரஜினிக்காக கதை சொன்ன டி.ஆர்…. எப்படியாப்பட்ட படம்? இப்படியா மிஸ் பண்ணுவாரு சூப்பர்ஸ்டார்?
இதற்கு சுதா கொங்கரா கொஞ்சம் வருத்தப்பட்டதாக தெரிகிறது .இருந்தாலும் இருவருமே பேசி ஒரு சுமுகமான வழியை தேடிக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆரம்பமே இப்படி ஒரு பிரச்சனையில் தான் ஆரம்பித்திருக்கிறது என சுதா கொங்கரா மற்றும் சிவ கார்த்திகேயன் இணையும் படத்தை பற்றி கோடம்பாக்கத்தில் பேசி வருகின்றனர்.
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…