
Cinema News
அனிருத் காலை வாரிவிட்ட சிவகார்த்திகேயன்.! பாத்து பாத்து பாட்டு போட்டதுக்கு நன்றி இதுதானா.?
சிவகார்த்திகேயன் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் டான். இந்த படம் நாளை மறுநாள் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. டான் எனும் பெயரில் தமிழிலும், காலேஜ் டான் எனும் பெயரில் தெலுங்கிலும் வெளியாக உள்ளது. டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து டான் படத்திலும் அதனை தக்க வைக்க சிவகார்த்திகேயன் காத்துக்கொண்டு இருக்கிறார்.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக சிவகார்த்திகேயன் பல்வேறு நேர்காணலில் கலந்து கொண்டு வருகிறார்.
அப்படி ஓர் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், சிவகார்த்திகேயனிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது, உங்களுக்கு தெரிந்து அடுத்து பான் இந்தியா இயக்குனர் யார் என கேட்கையில், அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் என தெரிவித்தார்.
அதே போல பான் இந்தியா இசையமைப்பாளராக யாரை சொல்வீர்கள் என கேட்டதற்கு ஏ.ஆர்.ரகுமான் என கூறி அதிரவைத்துவிட்டார். இந்த இடத்தில் ரசிகர்கள் பலரும் அனிருத் பெயரை தான் சிவா கூறுவார் என எதிர்பார்க்கையில், டக்கென ஏ.ஆர்.ரகுமான் பெயரை கூறியிருப்பார்.
இதையும் படியுங்களேன் – அஜித்துக்கு வந்த எச்சரிக்கை.! பதறி போய் அதிரடி நடவடிக்கை எடுத்த விஜய்.!
சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் பெரிய ஹிட்டான படமானாலும் சரி, பாடல்கள் ஆனாலும் சரி அது அனிருத் கைவண்ணத்தில் வந்த பாடல்களும், தெறிக்கும் தீம் பாடல்களும் தான் முக்கிய காரணம். ஆனால் அதனை மறந்து பான் இந்தியா இசையமைப்பாளர் கேள்விக்கு ஏ.ஆர்.ரகுமான் பெயரை கூறிவிட்டாரே என்றும், இன்று நேற்று நாளை என ஒரு படம் எடுத்த ரவிக்குமாரை பான் இந்தியா இயக்குனர் என கூறிய சிவா, அனிருத்தை கூற மறுத்தது ஏன் எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.