Connect with us

நீ ஜெயிச்சிட்ட டா.! சிவகார்த்திகேயனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாராட்டிய பாரதிராஜா.!

Cinema History

நீ ஜெயிச்சிட்ட டா.! சிவகார்த்திகேயனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாராட்டிய பாரதிராஜா.!

தமிழ் சினிமாவில் தற்போது நல்ல வெற்றிகளை சரியான நேரத்தில் கொடுத்து ஓரளவு தமிழ் சினிமாவை காப்பாற்றி வருகிறார் சிவகார்திகேயன். ஏற்கனவே இவர் நடித்த டாக்டர் திரைப்படத்தின் வெற்றி தான் கொரோனா இரண்டாவது அலையில் இருந்து திரையரங்கை மீட்க பெரிதும் உதவியது.

don

 

உண்மையில், கடைசியாக பிற மொழி படங்களின் ஆதிக்கமே தமிழகத்தில் அதிகமாக இருந்தது. அதனை தாண்டி வந்த எதிர்பார்த்த தமிழ் பெரிய ஹீரோ படங்களும் பெரிதாக சோபிக்க வில்லை. அதனை டான் நிச்சயம் குறைதீர்க்கும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன் – சிவாஜியில் சிவாஜி இல்லை., விக்ரமில் விக்ரம் இல்லை.! களோபரமான தமிழ் சினிமாக்கள் லிஸ்ட் இதோ..,

இந்த நிலையில், தற்போது ஓர் தகவலை மீசை ராஜேந்திரன் வெளியிட்டுள்ளார். அவர் நம்ம வீட்டு பிள்ளை பட ஷூட்டிங்கின் போது நடந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அதில், ‘ நம்ம வீட்டு பிள்ளை படத்தில் ஒரு நீளமான காட்சி இருக்குமாம். கிட்டத்தட்ட 5 பக்கம் இருக்குமாம். அதனை பாரதிரஜா முன்னிலையிலேயே ஒரே டேக்கில் முடித்துவிட்டாராம். ‘

‘ இதனை பார்த்த இயக்குனர் பாரதிராஜா சிவாவை பார்த்து கட்டியணைத்து நீ ஜெயிச்சிட்ட டா, என மனதார கூறி  முத்தமிட்டாராம். ‘ அந்தளவுக்கு சிவகார்த்திகேயன் அவரது நடிப்பை படத்திற்கு படம் மெருகேற்றி வருகிறாராம்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top