
Cinema News
எங்களின் பிழைப்பில் மண் அள்ளி போடுகிறார் சிவகார்த்திகேயன்- புலம்பும் திரையுலகம்
சிவகார்த்திகேயன் தற்போது “மாவிரன்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் தனது 21 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சிவகார்த்திகேயன் நடித்த சைன்ஸ் ஃபிக்சன் படமான “அயலான்” திரைப்படம் வருகிற தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது.

sivakarthikeyan1
சிவகார்த்திகேயன் ஒரு நடிகர் மட்டுமல்லாது தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் போன்ற பன்முகத் திறமையோடு வலம் வருகிறார். விஜய்யின் “பீஸ்ட்” படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய பாடலான “அரபி குத்து” வேற லெவலில் ஹிட் ஆனது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார்.
அதில் பேசிய அவர், “நான் ஒரு பிரபல பாடலாசிரியரிடம் பேசினேன். அப்போது அவர் சொன்னார், ‘எங்களுக்கு வேறு தொழிலே கிடையாது. முழுக்க முழுக்க பாடல் எழுதுவது மட்டுந்தான் எங்களுடைய தொழில். நாங்கள் இசையமைக்க முடியாது, நடிக்கவும் முடியாது. ஆனால் இசையமைப்பாளர்களும் நடிகர்களும் இப்போது பாட்டெழுத தொடங்கினால் நாங்கள் எங்கே போவது?’ என என்னிடம் கேட்டார். அவர் கேட்டது எனக்கு நியாயமாகவே பட்டது. இப்போதெல்லாம் யார் வேண்டுமானாலும் பாடல் எழுதலாம் என்ற நிலை வந்துவிட்டது” என கூறியிருந்தார்.

Anthanan
இயக்குனர் நெல்சனும் சிவகார்த்திகேயனும் மிக சிறந்த நண்பர்கள். ஆதலால் நெல்சன் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “ஜெயிலர்” திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நிச்சயம் ஒரு பாடல் எழுதுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.