சினிமாவில் இதெல்லாம் சகஜம்மப்பா!.. ஆரம்பத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கே டகால்டி காட்டிய சிவகார்த்திகேயன்..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். மிகக்குறுகிய காலத்தில் விஜய் , அஜித் இவர்களுக்கு அடுத்த இடத்தில் இன்று வளர்ந்து நிற்கிறார். நடிப்பையும் தாண்டி பாடலாசிரியராக, பாடகராக, தயாரிப்பாளராக என பன்முகத்திறமைகள் வாய்க்கப் பெற்ற நடிகராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன்.
விஜய் தொலைக்காட்சியில் ஏதோ கோமாளித்தனமாக சுற்றி திரிந்து கொண்ட சிவகார்த்திகேயனை கரம் பிடித்து சினிமாவில் இழுத்து வந்த பெருமைக்குரியவர் நடிகர் தனுஷ். 3 என்ற படத்தின் மூலம் தனுஷுக்கு நண்பனாக அந்தப் படத்தில் வலம் வந்தார்.
அதன் பிறகு அவருக்குள் இருக்கும் அந்த கதாநாயகன் என்ற மெட்டீரியலை படம் பிடித்துக் காட்டிய பெருமைக்குரியவர் இயக்குனர் பாண்டியராஜ். ‘மெரீனா’ என்ற படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவிற்கு சிவகார்த்திகேயனை ஹீரோவாக அறிமுகமாக்கினார் பாண்டியராஜ்.
அதிலிருந்து இருவருக்கும் நல்ல நட்பு இருந்து வந்த நிலையில் கொஞ்ச நாள்களாக இருவருக்குமிடையில் சிறு உரசல் இருந்து வந்ததாம். இதனாலேயே மீண்டும் பாண்டியராஜுடன் இணைய இருந்த சிவகார்த்திகேயன் ஏதோ ஏதோ காரணம் காட்டி புதிய படத்திலிருந்து விலகி விட்டாராம்.
இதையும் படிங்க : ஏன்ப்பா அதெல்லாம் நான் போட்ட பாட்டுதான்ப்பா!.. தேவாவிற்கு இந்த நிலைமையா?.. லண்டனில் மூக்கறுபட்ட தேனிசை தென்றல்..
இதனால் பாண்டியராஜ் சிவகார்த்திகேயன் போனால் என்ன? விஷால் இருக்கிறார் என்று விஷாலை அணுகியிருக்கிறார். ஏற்கெனவே பாண்டியராஜுன் விஷாலும் ‘கதகளி’ என்ற படத்தில் சேர்ந்து பணிபுரிந்தார்கள். இதன் மூலம் மீண்டும் விஷாலுடன் புதிய படத்தை இயக்க இருக்கிறார் பாண்டியராஜ்.