ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், பால சரவணன், ஷரத் கேல்கர் உள்ளிட்ட பலர் நடித்த ஏலியன் திரைப்படமான அயலான் ஜனவரி 12ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது.
முதல் நாளில் சிவகார்த்திகேயன் படத்தை விட தனுஷின் கேப்டன் மில்லர் வசூலில் பல மடங்கு அதிகரித்தது. இந்நிலையில், தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் என்டர்டெயின்மென்ட் இல்லை என்றும் இரண்டாம் பாதி சொதப்பிய நிலையில், குடும்ப ஆடியன்ஸ் அப்படியே சிவகார்த்திகேயன் படத்தை பார்க்க நகர்ந்து விட்டனர்.
இதையும் படிங்க: கடைசி நேரத்துல என்ன இப்படி ஆகிடுச்சு.. இந்த சீசனிலும் கமல் ஃபேவரைட் போட்டியாளருக்கு கப் கிடைக்கலையா?
முதல் நாளில் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் உலகம் முழுவதும் 10 முதல் 12 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகின. அதே நேரத்தில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் முதல் நாளில் 15 முதல் 17 கோடி வசூல் ஈட்டியதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில், முதல் நாளை விட 2வது நாளில் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தின் வசூல் அதிகரித்து 2 நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 20 கோடி ரூபாய் வசூலை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: எல்லாரும் நடிக்குறாங்க… ஐஸ்வர்யா ராஜேஷ் கேப்டனோட கால் தூசி!.. வெடிக்கும் மீசை ராஜேந்திரன்…
அதே நேரத்தில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் 15 கோடி ரூபாயில் இருந்து 2ம் நாள் வசூல் சற்றே சறுக்க 22 முதல் 25 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக கூறுகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் வசூல் கேப்டன் மில்லர் வசூலை நெருங்கி வருவதாகவும் பொங்கல் விடுமுறைக்குள் தனுஷ் படத்தை சிவகார்த்திகேயன் படம் முந்த அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்.
சொர்க்கவாசல் படத்தின்…
Lokesh kanagaraj:…
தனுஷ் தயாரிச்ச…
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…