
Cinema News
அல்லல் படும் ‘அயலான்’ திரைப்படம்.. கரை சேர்க்க கையேந்தும் அவலம்!.. சிவகார்த்திகேயன் சமாளிப்பாரா?..
‘நேற்று இன்று நாளை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் ரவிக்குமார். இந்த படம் ஒரு சயின்ஸ் பிக்ஷன் திரைப்படமாக வந்திருந்தது. 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை பலரும் பாராட்டினார். டைம் மெசின் மூலமாக படத்தின் ஹீரோ இதற்கு முன் ஏற்பட்ட பிரச்சினைகளை சமாளிப்பது தான் இந்த கதை.

sivakarthikeyan
படத்தை கொண்டு போன விதம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தின் மூலம் மிகவும் கவரப்பட்டவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். அந்த படத்தின் இயக்குனர் ரவிக்குமாரிடம் நாம் ஒரு படம் சேர்ந்து பண்ணுவோம் என்று கூற அதன் மூலம் உருவானது தான் ‘அயலான் ’ திரைப்படம்.
இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுத் பிரீத் சிங், வழக்கம் போல யோகிபாபு, படத்திற்கு இசை ஏஆர்.ரகுமான் என படம் விறுவிறுப்பாக போக இடையிலேயே கடன் சுமையால் சிவகார்த்திகேயன் வேறொரு தயாரிப்பு நிறுவனத்திற்கு படம் நடிக்க போய்விட்டார்.

ayalaan team
இதனால் அயலான் திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் அயலான் திரைப்படத்தின் இயக்குனர் ரவிக்குமாருக்கு 2டி நிறுவனமான சூர்யாவிடம் இருந்து அழைப்பு வந்ததாக சில தகவல்கள் வந்தது. அதனால் இனிமேல் அயலான் படத்தின் நாடி அவ்ளோதான் என்று பல வதந்திகள் வந்தது.
இதையும் படிங்க : படம் ஓடாதுன்னு ரஜினியிடமே சொன்ன டான்ஸ் மாஸ்டர்… இருந்தாலும் இவ்வளவு தைரியம் ஆகாதுப்பா!..
ஆனால் உண்மையிலேயே அயலான் படத்தின் படப்பிடிப்பு இன்னும் 30 சதவிகிதம் இருக்கிறதாம்.. அதற்காக கிட்டத்தட்ட 30 கோடி பணம் தேவைப்படுகிறதாம். ஏற்கெனவே இதுவரை எடுத்தவரைக்கும் 90 கோடி வரை செலவாகியிருக்கிறதாம். இன்னும் 30 கோடி என்றதும் யோசிக்கிறார்களாம். மேலும் சிவகார்த்திகேயனை நம்பி பணம் போடவும் தயங்குகிறார்களாம்.

ayalaan team
ஏனெனில் வினியோகஸ்தரர்கள் பலருக்கு தரவேண்டிய பணபாக்கி நிறையவே சிவகார்த்திகேயனுக்கு இருக்கின்றதாம். இப்ப இந்த பிரச்சினை வேற. அதனால் இதை எப்படி ஈடுகட்ட போகிறார் சிவகார்த்திகேயன் என்று கோடம்பாக்கத்தில் பேசி வருகிறார்கள்.