ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், பானுமதி, பால சரவணன், இஷா கோபிகர் நடித்த அயலான் திரைப்படம் பொங்கல் பண்டிகை விடுமுறையை குறிவைத்து ரிலீசானது. தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயன் அயலான் திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில், திரைக்கு வந்த பிறகு பெரிதாக இரண்டு படங்களும் ஓடவில்லை.
அதிக பட்ஜெட்டில் உருவான அயலான் மற்றும் கேப்டன் மில்லர் படங்கள் அதிகபட்சமாக 75 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. அடுத்தடுத்த வாரங்களில் சிங்கப்பூர் சலூன், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.
இதையும் படிங்க: இது வெடிகுண்டு இல்லை!.. வெறும் குண்டு!.. ஆர்ஜே பாலாஜி பண்ண அலப்பறையை அம்பலப்படுத்திய ப்ளூ சட்டை!..
தெலுங்கில் அயலான் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அதிரடியாக அடுத்த வாரம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் அயலான் திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
மேலும் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படமும் வரும் பிப்ரவரி ஒன்பதாம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் ரிலீசான இரண்டு படங்களும் அதிரடியாக ஓடிடிக்கு வரவுள்ள நிலையில், வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த படங்களை பார்த்து ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நண்பனை கழட்டிவிட்டு அந்த நடிகைக்கு கை கொடுத்த உதயநிதி!.. இந்த முறை பட்ட நாமம் போடாமல் இருந்தால் சரி!
அயலான் முதல் பாகமே படு சொதப்பலாக மாறிய நிலையில், அடுத்த பாகத்தை எடுப்பேன் என சிவகார்த்திகேயன் சொன்னதெல்லாம் செம உருட்டு என்கின்றனர். அயலான் படத்திற்கு சக்சஸ் மீட் கூட வைக்கவில்லையே ஏன் என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன. கடந்த வாரம் வெளியான 2 படங்களுக்கும் ரிலீஸ் ஆனதே சக்சஸ் தான் என சக்சஸ் மீட் வைத்து விட்டார்கள்.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…