Connect with us

Cinema News

அடுத்த விஜய்ன்னுலாம் கனவு காண கூடாது!.. சிவகார்த்திகேயனின் அயலான் இத்தனை கோடி நஷ்டமா?..

விஜய் அரசியலுக்கு செல்ல உள்ளதால் இன்னும் 2 படத்துக்கு மேல் நடிக்க மாட்டார் என அறிவித்து விட்டார். உடனடியாக கோலிவுட்டின் எதிர்காலமே சிவகார்த்திகேயன் தான் என்றும் அடுத்த தளபதி எஸ்கே தான் என அவரது ரசிகர்கள் அலப்பறையை கிளப்பி வருகின்றனர்.

ஆனால், அதெல்லாம் சும்மா வெறும் வாய் உருட்டு தான் என்றும் ஏணி வச்சு எட்டிப் பார்த்தாலும் விஜய் போல சிவகார்த்திகேயன் வரமுடியாது என்பதை தான் கலெக்‌ஷன் ரிப்போர்ட் சொல்கிறது என்கின்றனர்.

இதையும் படிங்க:  வேட்டையன் நடிகைக்கு ஜிம்மில் ஹெல்ப் பண்றது யாருன்னு பாருங்க!.. இவங்களும் லாஸ்லியா போல மாறிட்டாங்களே!

சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் உலகம் முழுவதும் 75 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாக தயாரிப்பு நிறுவனம் கடைசியாக அறிவித்தது. அதன் பின்னர், அவர்களே தெலுங்கில் படம் ரிலீஸ் ஆகாத சோகத்தில் அமைதியாகி விட்டனர்.

உண்மையாகவே அயலான் படத்தின் பட்ஜெட் மட்டும் 90 கோடி ரூபாய் என வலைப்பேச்சு பிஸ்மி லேட்டஸ்ட்டாக வெளியிட்டுள்ள பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் வீடியோவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: இத்தனை பேரும் ஓட்டுப்போட்டா சிஎம் ஆகிடுவாரோ?.. தலைவர் ஆனதும் ரசிகர்களை முதன்முறையாக சந்தித்த விஜய்!

படத்திற்கு பல ஆண்டுகள் வட்டி குட்டிப் போட்டு அது ஒரு தனி சுமையையே ஏற்படுத்தியது என்றும் படத்திற்கு தியேட்டர் மூலமாக உலகளவில் வந்த வசூல் வெறும் 55 கோடி தான் என்றும் ஆடியோ ரைட்ஸ், இந்தி டப்பிங் ரைட்ஸ் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் என ஒட்டுமொத்தமாக 86.75 கோடி ரூபாய் தா லாபம் வந்ததாகும் படத்தின் பட்ஜெட் 90 கோடியுடன் பப்ளிசிட்டி செலவு 4 கோடி ரூபாய், டிஸ்ட்ரிப்யூசன் செலவு 1.5 கோடி சேர்ந்த நிலையில், 8 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக வலைப்பேச்சு பிஸ்மி கூறியுள்ளார்.

ஆனால், அவர் வெளியிட்டுள்ள இந்த பாக்ஸ் ஆபிஸில் 70 கோடி ரூபாய் வட்டியும் இந்த படத்திற்கு கடனாக மாறியது என ஆரம்பத்தில் சொல்லி விட்டு அதை கடைசியில் அவரே மறந்து விட்டார். சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் பெரிய தோல்வி படம் என்று மட்டும் கூறியுள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top