Cinema News
அயலான் வேற்று கிரகத்தில்தான் ரிலீஸ் ஆகுமா?.. அடுத்தடுத்து சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஆப்பு வருதே!
Ayalan: புத்திசாலியாக இருப்பவர்கள் சினிமாவில் நடிப்பதோடு நிறுத்திக்கொள்வார்கள். தயாரிப்பு பக்கம் போகமாட்டார்கள். ஏனெனில், படம் தோல்வி அடைந்தால் நடித்து சம்பாதித்த அத்தனை பணமும் போய்விடும். எனவேதான், பெரும்பலானா நடிகர்கள் நடித்தோமா, சம்பளம் வாங்கினோமா என இருந்துவிடுவார்கள்.
அஜித், விக்ரம், ரஜினி போன்ற நடிகர்கள் சம்பளத்தை வாங்கி கொண்டு நடிப்பதோடு நிறுத்திவிடுவார்கள். ரஜினிக்கே படையாப்பா படம் வசூல் கொடுத்தாலும் அவர் தயாரித்து நடித்த பாபா படம் பெரிய நஷ்டத்தையே கொடுத்தது. சிவகார்த்திகேயன் சினிமாவில் வளர்ந்து வந்த காலத்திலேயே ‘சொந்த படம் எடுத்து சிக்கலில் மாட்டிக்கொள்ளாதே’ என அவருக்கு அறிவுரை சொன்னவர் அஜித்.
இதையும் படிங்க: விஜயகாந்த் மரண செய்தி கேட்டதும் ரஜினி செய்த முதல் காரியம்.. சொன்னது இதுதான்!…
ஆனால், ஆசை யாரை விட்டது?.. பினாமி பெயரில் சொந்த பணம் எடுத்து கையை சுட்டுக்கொண்டார் சிவகார்த்திகேயன். 3 வருடங்களுக்கு முன்பே அவருக்கு ரூ.100 கோடி வரை கடன் இருந்தது. எனவே, அவரின் ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் பஞ்சாயத்து வரும். சிவகார்த்திகேயனிடம் பஞ்சாயத்து வைப்பார்கள். அடுத்த 4 படங்களை சம்பளம் வாங்காமல் நடித்து கடனை தீர்க்கிறேன் என சொல்வார்.
ஒரு படத்தில் செய்வார். அடுத்த படத்தில் செய்யமாட்டார். மீதமுள்ள கடன் வட்டி போடும். இப்படி தொடர்ந்து கடனிலேயே அவர் சிக்கியிருக்கிறார். இந்நிலையில் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் ‘அயலான்’ படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு இப்போது 85 கோடி கடன் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: நெருங்கும் பிக்பாஸ் பைனல்ஸ்!.. வின்னர் தேர்வில் நடக்கப்போகும் சூழ்ச்சி!… எல்லாம் போச்சா!
நேற்று இரவு முழுவதும் விடிய விடிய பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஏற்கானவே அயலான் படத்திற்கு சிவகார்த்திகேயன் சம்பளம் வாங்கவில்லை. இருந்தாலும் இன்னும் 25 கோடி கடனை தான் ஏற்றுக்கொள்வதாக அவர் கூறியுள்ளார். மீதமுள்ள 60 கோடிக்கு அயலான் பட தயாரிப்பாளர் பொறுப்பேற்றால் மட்டுமே அப்படம் வெளியாகும் என்கிற நிலை உருவாகியுள்ளது.
இன்று மீண்டும் பேச்சுவார்த்தையை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில், சுமூக உறவு ஏற்பட்டால் மட்டுமே அயலான் படம் நாளை திட்டமிட்டபடி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.