Categories: latest news tamil cinema gossips

அந்த நடிகரை காப்பி அடிக்கிறார் சிவகார்த்திகேயன் … இப்படி சொல்லிட்டாரே எஸ் ஜே சூர்யா

சிவகார்த்திகேயன் மிமிக்ரி திறமை மூலம் பிரபல விஜய் தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று பின்பு பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்று தனது திறமை மூலம் பிரபலமானவர்.

இவர் மெரினா படத்தில் கதாநாயகனாகவும் தனது திரையுலக வாழ்வை துவங்கினார். தற்போது தமிழ் திரைத்துறையில் ஒரு முண்னணி நடிகராக உள்ளார். பல படங்களை தயாரித்தும், நடித்தும், தமிழ் திரைத்துறையில் பணியாற்றி வருகிறார்.

எஸ் ஜே சூர்யா சிறந்த இயக்குநர்,நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர். அவர் ஹீரோ, வில்லன், கவுரவ தோற்றம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்து ரசிகர்களின் மனதை வெல்லுபவர்.

அவர் ஒரு பேட்டியில் கவுண்டமணி திரையில் பேசிய வசனங்களையும், ஜோக்ஸ்களையும் சிவகார்த்திகேயன் தனது படங்களில் காப்பி அடிக்கிறார் என எஸ் ஜே சூர்யா சொல்கிறார்.

Published by
crdesk