Categories: Cinema News Entertainment News latest news

மீண்டும் அப்பாவான சிவகார்த்திகேயன்… என்ன குழந்தைன்னு பாருங்க!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது மீண்டும் ஒரு குழந்தைக்கு அப்பாவாகி இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் தற்போது அமரன் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து டான் இயக்குநர் சிபியுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்.

இது மட்டுமின்றி இயக்குநர் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்திலும் ஹீரோவாக ஒப்பந்தமாக உள்ளார். இது அவரின் 25-வது படமாக உருவாகவிருக்கிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிவகார்த்திகேயன் மீண்டும் அப்பாவாகப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்தன.

தற்போது அது உண்மையாகி இருக்கிறது. ஆமாம். சிவகார்த்திகேயன்-ஆர்த்தி தம்பதிக்கு 3-வது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில், ”மூன்றாவது குழந்தைக்கு அப்பாவாகி இருக்கிறேன்.

நேற்று இரவு (ஜூன் 2) ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆராதானா, குகன் என என்னுடைய 2 குழந்தைகளுக்கும் நீங்கள் தந்த ஆதரவையும், அன்பையும் இந்த குழந்தைக்கும் தர வேண்டுகிறேன்,” என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக அமரன் திரைப்படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Published by
manju