300 கோடினா சும்மாவா? தட புடலாக பிரியாணி விருந்து கொடுத்து அசத்திய சிவகார்த்திகேயன்

amaran
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் கடந்த மாதம் 31ஆம் தேதி ரிலீசான திரைப்படம் தான் அமரன். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார். இந்த படம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியானது.
அதுவரை ஒரு ராணுவ வீரர் இந்த நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தார் என்று தான் அனைவரும் அவரைப் போற்றி வணங்கி வந்தனர். ஆனால் அவருடைய தியாகம் எந்த அளவு பெரியதாக இருந்தது என்பதை விளக்கும் வகையில் இந்த அமரன் திரைப்படம் அனைவர் மனதிலும் ஆழமாக போய் பதிந்தது. அதிலும் மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபெக்கா தனி ஆளாக இருந்து ஒட்டுமொத்த குடும்பத்தையும் எந்த அளவு மன தைரியத்துடன் தாங்கினார் என்பதை விளக்கும் திரைப்படமாகவும் இது அமைந்தது.
இதையும் படிங்க: பல சர்ச்சைகளை தாண்டி கைக் கூடிய கீர்த்தியின் காதல்.. இத்தனை சுவாரஸ்யங்களா?
ஆக மொத்தம் இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் மேஜர் முகுந்த் வரதராஜனையும் அவருடைய மனைவி இந்துவையும் இன்றுவரை சோசியல் மீடியாவில் புகழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் படம் வெளியாகி மூன்று வாரங்களை நெருங்கும் நிலையில் படத்தின் மொத்த வசூல் 300 கோடி என தகவல் வெளியாகியிருக்கிறது .

saipallavi
இதுவரை சிவகார்த்திகேயன் நடித்து எந்த ஒரு படமும் 300 கோடி வசூலை சந்தித்தது இல்லை. இதுதான் முதல் படம் .அதனால் இந்த வெற்றியை சிவகார்த்திகேயன் அவருடைய 23 வது படத்தின் குழுக்களுடன் சேர்ந்து கொண்டாடி வருகிறார். அவரின் 23 வது படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார். அந்தப் பட யூனிட்டுடன் சேர்ந்து சிவகார்த்திகேயன் மிகவும் சந்தோஷமாக கேக் வெட்டி கொண்டாடினார். அது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த யூனிட்டிற்கும் இன்று பிரியாணி விருந்தும் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன் .அந்த ஒரு வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது
இதோ அந்த வீடியோ லிங்க: https://www.instagram.com/reel/DCjnGPHvhI5/?igsh=bHYzdmp4YjNyOXZp