ஷூட்டிங் நின்னு போச்சு!! “என் மேல அப்படி என்ன கோபம்??” சிவகார்த்திகேயனிடம் புலம்பி தள்ளிய இயக்குனர்…

by Arun Prasad |
Sivakarthikeyan
X

Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான “பிரின்ஸ்” திரைப்படம், கடந்த மாதம் தீபாவளியை முன்னிட்டு வெளிவந்தது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா என்ற ஆங்கிலேயர் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் சத்யராஜ், பிரேம்ஜி ஆகிய பலரும் நடித்திருந்தனர்.

Prince

Prince

வழக்கம்போல் சிவகார்த்திகேயன் திரைப்படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புதான் “பிரின்ஸ்” திரைப்படத்திற்கும் இருந்தது. ஆனால் இத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆதலால் “பிரின்ஸ்” திரைப்படத்திற்கான வரவேற்பு வெகுவாக குறைந்தது.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது “மாவீரன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை “மண்டேலா” இயக்குனர் மடோன்னே அஸ்வின் இயக்கி வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார்.

Maaveeran

Maaveeran

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது சிவகார்த்திகேயனுக்கும் மடோன்னே அஸ்வினுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும், ஆதலால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சமீப காலமாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வந்தது. “பிரின்ஸ்” திரைப்படத்தின் தோல்வி காரணமாகத்தான் இருவருக்குள்ளும் மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இதன் உண்மை தன்மை குறித்து தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது சிவகார்த்திகேயனுக்கும் மடோன்னே அஸ்வினுக்கும் எந்தவித மனஸ்தாபமும் ஏற்படவில்லையாம். எனினும் படப்பிடிப்பு சில நாட்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது உண்மை எனவும் கூறப்படுகிறது.

Madonne Ashwin and Sivakarthikeyan

Madonne Ashwin and Sivakarthikeyan

அதாவது மழை காரணமாக “மாவீரன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஆனால் சமீப நாட்களாக ஊடகங்களில் சிவகார்த்திகேயனுக்கும் இயக்குனர் மடோன்னா அஸ்வினுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதால்தான் படப்பிடிப்பு நின்றுப்போனதாக பரவிய செய்திகள் மடோன்னே அஸ்வினை கலக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளதாம். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனிடம் புலம்பித் தள்ளினாராம் இயக்குனர்.

இதையும் படிங்க: கண்ணதாசனுக்கு வந்த விபரீத ஆசை… “இதெல்லாம் உங்களுக்கு செட் ஆகாது”… எம்.எஸ்.வி கொடுத்த அட்வைஸ்…

Madonne Ashwin

Madonne Ashwin

“என் மேல மீடியாவுக்கு என்ன கோபம்ன்னு தெரியல. படத்தை குறித்து எதாவது சந்தேகம் இருந்தால் என்னையே தொடர்பு கொண்டு கேட்டிருக்கலாமே? ஏன் இப்படி எழுத வேண்டும்?” என சிவகார்த்திகேயனிடம் புலம்பினாராம். அதற்கு சிவகார்த்திகேயன் “நீங்கள் இப்போது வளர்ந்து வரும் இயக்குனராக திகழ்கிறீர்கள். மீடியா அப்படி எழுதுவது வழக்கம்தான். ஆதலால் இதற்கெல்லாம் கலக்கமடைய வேண்டாம்” என இயக்குனருக்கு ஆறுதல் கூறினாராம். இதன் மூலம் இருவருக்குள்ளும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக பரவிய செய்தி வதந்தி என தெரியவருகிறது.

Next Story