jiiva (2)
இந்த பொங்கல் தளபதி பொங்கலாக இருக்குமா? அல்லது திடீர் தளபதி பொங்கலாக இருக்குமா என்று எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. யாருமே எதிர்பார்க்காத லிஸ்ட்லயே இல்லாத ஜீவா பொங்கலாகத்தான் அமைந்திருக்கிறது. ஜன நாயகன் படம் ரிலீஸ் ஆகவில்லை. அதற்கு அரசியல்தான் காரணம் என அனைவருக்குமே தெரியும். அந்தப் படத்தை ஒரேடியாக முடக்க சதியும் நடந்து வருகிறது.
இரண்டாம் கட்ட சிபிஐ விசாரணைக்கு இன்று டெல்லி புறப்படுகிறார் விஜய். அதனால் அந்தப் படத்தின் ரிலீஸ் என்பது இப்போதைக்கு இல்லை. இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் வெளியானது. சுதா கொங்கரா டைரக்ஷன், ரவிமோகனின் வில்லத்தனம், எழுச்சிமிக்க போராளியாக சிவகார்த்திகேயன் மற்றும் அதர்வாவின் நடிப்பு, தமிழில் அறிமுகமாகும் ஸ்ரீலீலா என ஒரு பெரிய ஹைப்பே இந்தப் படத்திற்கு இருந்தது.
ஜிவியின் 100வது படமும் கூட. ஆனால் படம் ரிலீஸ் ஆன முதல் கலவையான விமர்சனங்கள்தான் வந்தன. வசூலிலும் சொதப்பியது. சரி, பொங்கல் விடுமுறையிலாவது வெயிட் பண்ணி பார்ப்போம் என்றால் திரையரங்குகள் காத்து வாங்கிக் கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஜீவாவின் நடிப்பில் தலைவர் தம்பி தலைமையில் படம் ரிலீஸ் ஆகி பட்டையை கிளப்பி வருகிறது.
நிதிஷ் சஹாதேவ் இயக்கத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு நடிப்பில் இந்தப் படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. வித்தியாசமான கதையில் வெளியான இந்தப் படத்திற்கு மக்களின் ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்தப் படத்தை பற்றி பேசும் போதெல்லாம் அண்ணன் வரலைனா என்ன தம்பி வந்துட்டேன் என ஜீவா விஜயுடனான நட்பையும் அன்பையும் வெளிப்படுத்தி வருகிறார்.
இதுவே விஜய் ரசிகர்களுக்கு ஒரு ஆறுதலாகா பார்க்கப்படுகிறது. எங்கு பார்த்தாலும் தலைவர் தம்பி தலைமையில் படத்தை பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஜீவா கொடுத்த ஒரு பேட்டி வைரலாகி வருகின்றது. ஜீவா, விநய், சந்தானம் ஆகியோர் நடிப்பில் வெளியன திரைப்படம் என்றென்றும் புன்னகை. இந்தப் படத்தில் விநய்-க்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தவர் சிவகார்த்திகேயன்தானாம்.
அந்த நேரத்தில்தான் சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் நடிகராக இருந்தார். ஒரு பக்கம் சந்தானம், இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் என்று ஒரே விஜய் டிவி புராடக்ட்டாக இருக்கும் என்ற காரணத்தினால்தான் விநய் நடித்தார் என ஜீவா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
நடிகர் ஜீவா…
முருங்கைக்காய் என்றாலே…
சுதாகொங்கரா இயக்கத்தில்…
விக்ரம் பிரபு…
தமிழ், தெலுங்கு,…