வீட்டு பால்கனில இருந்து அவங்கள பாப்பேன்...! ஓரமா நின்னு சைட் அடிச்ச சிவகார்த்திகேயன்..
தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இன்று ஒட்டு மொத்த சினிமாவே போற்றும் ஒரு நடிகராக வளர்ந்து கொண்டு இருக்கிறார். மெரினாவில் தொடங்கிய இவரது திரை வாழ்க்கை பயணம் ஒரு டானாக வெற்றி நடை போட்டுக் கொண்டு இருக்கிறது.
ஆரம்பத்தில் ஆங்கராக ஆரம்பித்த பயணம் படிபடியாக முன்னேறி இன்று ஒரு தயாரிப்பாளராக பாடகராக பாடலாசிரியராக ஒரு மொத்த பிம்பமாக வளர்ந்து நிற்கிறார். தற்போது ஒரு தெலுங்கு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதுபோக சமூக உதவிகளையும் செய்து வருகிறார். இந்த நிலையில் ஒரு பேட்டியில் தனது சின்ன வயதில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார். அவர் ஸ்கூல் படிக்கும் போதில் இருந்தே நடிகை குஷ்புவின் பெரிய ரசிகராம். குஷ்புவின் வீட்டு பக்கத்தில் தான் சிவகார்த்திகேயன் சித்தி வீடு இருக்கிறதாம்.
ஸ்கூல் விடுமுறைக்காக குஷ்புவை பார்ப்பதற்காகவே சித்தி வீட்டிற்கு வருவாராம். வீட்டு பால்கனியில் இருந்து குஷ்பு வரும்போது போகும்போதெல்லாம் ஓரமாக நின்று பார்ப்பராம். கூடவே அவரது தாத்தாவும் பார்ப்பார் என்று சிவகார்த்திகேயன் கூறினார்.